சிலிண்டர் பதிவு செய்ய புதிய எண் அறிவிப்பு

சமையல் எரிவாயு முன்பதிவு செய்ய நவம்பர் 1ஆம் தேதி முதல் புதிய எண் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர்களை முன்பதிவு செய்து பெற, கட்டணமில்லா தொலைபேசி எண் பயன்பாட்டில் உள்ளது. இந்த எண்ணிற்கு வாடிக்கையாளர்கள் பதிவு செய்துள்ள தங்கள் மொபைல் எண்ணில் இருந்து தொடர்பு கொண்டு சிலிண்டர் முன்பதிவு செய்யலாம்.இந்நிலையில் இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், வரும் நவம்பர் 1ஆம் தேதி முதல் நாடு முழுவதும் புதிதாக ஒரே தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 7718955555 என்ற எண்ணில் 24 மணி நேரமும் சிலிண்டர் முன்பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலமாகவும் சிலிண்டர் முன்பதிவு செய்யலாம். இப்புதிய தொலைபேசி எண் மூலம், வாடிக்கையாளர்கள் ஒரு மாநிலத்தில் இருந்து வேறொரு மாநிலத்துக்கு இடம் பெயர்ந்தாலும் சிலிண்டர் முன்பதிவை எவ்வித சிரமமும் இன்றி செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments