அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி, மணமேல்குடி ஒன்றிய செயலாளர் V.S முகமது இஸ்மாயில் அவர்கள் இல்ல மணவிழா மற்றும் நடக்க இருக்கும் 2021 சட்டமன்ற தேர்தலுக்கான பயிற்சி பட்டறை .!
அக்டோபர் -26-2020அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி மணமேல்குடி ஒன்றிய செயலாளர் V.S முகமது இஸ்மாயில் அவர்கள் இல்ல மணவிழா இதில் மாநில, மாவட்ட, தொகுதி, ஒன்றிய, நகர, ஊராட்சி நாம் நாம் தமிழர் கட்சி உறவுகள் மற்றும் பொறுப்பாளர்களுக்கு கலந்து கொண்டனர்,நிறைவாக மணமகன் மரக்கன்றை நட்டார்,வந்தவர்களுக்கு மரக்கன்று பரிசளிக்கப்பட்டது.
திருமண நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக மாநில ஒருங்கிணைப்பாளரும் 2021அறந்தாங்கி  சட்டமன்ற வேட்பாளருமான  மு.இ ஹிமாயுன் கபீர் கலந்து கொண்டார் 

அன்று மாலை ஆவுடையார் கோவில் ஒன்றிய இணைச்செயலாளர்,அரசநகரி முகம்மது அசார் அவர்கள் இல்லத்தில் 2021 சட்டமன்ற தேர்தல் பயிற்சி பட்டறை சுமார் 2 மணி நேரம் நடைபெற்றது இதில்

மணமேல்குடி ஒன்றிய தலைவர் வழக்கறிஞர் கபார்கான் 

தொகுதி தலைவர் . முகமது இப்ராஹிம்,

தொகுதிச் செயலாளர் .வேங்கை பழனி 

மற்றும் மாணவர் பாசறை,இளைஞர் பாசறை,சுற்றுச்சூழல் பாசறை,தகவல்  தொழில்நுட்ப பாசறை, பாசறை உறவுகள் கலந்து கொண்டன.
மாநில ஒருங்கிணைப்பாளரும் 2021அறந்தாங்கி  சட்டமன்ற வேட்பாளருமான  மு.இ ஹிமாயுன் கபீர் சிறப்புரை, பயிற்சி உரையாற்றினார்.


தகவல்:
முகம்மது நூருல்லா 
அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments