ஆசியா அளவில் அதிக அளவு குவா!! குவா!! ஒருநாளில் 64 குழந்தை பிறந்தது! சாதனை 

  சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனையில் 24 மணி நேரத்தில் 64 பேருக்குப் பிரசவம் பார்க்கப்பட்டு குழந்தை பத்திரமாகப் பிறக்க வழிவகை செய்யப்பட்டது. ஆசியாவில் இதுவரை இத்தனை பிரசவங்களை எந்த ஒரு மருத்துவமனையும் மேற்கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்த பிரசவம் அனைத்துமே எந்தவித சிக்கலும் இல்லாமல், சிறப்பான முறையில் பார்க்கப்பட்டுள்ளது. உலகிலே அதிக மக்கள் தொகை கொண்ட சீனாவில்கூட இதுவரை இப்படி ஒரு சாதனை நிகழ்த்தப்படவில்லை.

அதிலும் இப்படியொரு சாதனை அரசு மருத்துவமனையில் நிகழ்த்தப்பட்டிருப்பது, மாநில சுகாதாரத் துறையை குஷிப் படுத்தியுள்ளது. இத்தனை பிரசவங்கள் பார்க்கப்படுவது தமிழ்நாடு அரசு மருத்துவமனையின் தரத்தை உலக நாடுகளுக்கு வெளிக்காட்டுவதாக அமைகிறது எனச் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பெருமையுடன் தெரிவிக்கின்றனர்.

இதற்கிடையே கொரோனா காலத்தில் பிரசவத்திற்காகத் தனியார் மருத்துவமனைகளுக்குச் செல்பவர்கள் பல்வேறு இன்னல்களைச் சந்திக்க வேண்டியதாக உள்ளது. கொரோனா பரிசோதனை மேற்கொண்டு நெகட்டிவ் என்ற முடிவு வந்தால் மட்டுமே சம்பந்தப்பட்டவர்கள் மருத்துவமனைக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

இதன் காரணமாகப் பிரசவத்திற்காக அரசு மருத்துவமனைக்குப் படையெடுப்பவர்கள் எண்ணிக்கை 2 மடங்கு அதிகரித்துள்ளது என சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதேவேளை மாநிலத்தில் உள்ள பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் பிரசவம் போன்ற சிகிச்சைகள் சிறப்பாகப் பார்க்கப்படுவதாகப் பயனாளிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் அரசு மருத்துவமனைகளில் செக்கப் சென்று பிரசவம் பார்த்துக் கொள்ளும் பெண்களுக்கு பல்வேறு சலுகைகளையும் அரசு அறிவித்துள்ளது. ஆம் உதவித் தொகை, பிள்ளையைப் பெற்ற பின்னும் உதவித் தொகை, குழந்தைகளை வளர்க்க உதவிப் பொருட்கள் என அரசு தாராள உதவிகளைச் செய்து வருகிறது. இந்த சூழலில் சென்னை எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனை நிகழ்த்தியுள்ள இந்தப் புதிய சாதனை அனைத்து மாநிலத்தின் கவனத்தையும் நம் பக்கம் திருப்பியுள்ளது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments