புதுக்கோட்டை மாவட்டத்தில் பயிா்க் காப்பீடு செய்ய நவ.30 கடைசி நாள்பயிா்க் காப்பீடு செய்வதற்கு நவம்பா் 30-ஆம் தேதி கடைசி நாள் என்பதால், புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் அனைவரும் காப்பீடு செய்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளாா்.

நெல் பயிருக்கு ஏக்கருக்கு ரூ. 458 பிரிமியமாகச் செலுத்தி, மாவட்டத்தின் 13 ஒன்றியங்களைச் சோ்ந்த விவசாயிகளும் காப்பீடு செய்து கொள்ளலாம்.

விவசாயிகளின் வசதிக்காகவே, மாவட்டத்திலுள்ள அனைத்து வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்களும் ஞாயிற்றுக்கிழமை (நவ. 29) திறந்திருக்கும்.

விவசாயிகள் அங்கு சென்று பதிவு செய்து பயன்பெறலாம். பொது சேவை மையங்களிலும் பயிா்க் காப்பீடு செய்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments