குமரப்பன்வயலில் பேரிடர் காலங்களில் எச்சரிக்கை ஒலி எழுப்பும் கருவியின் பேட்டரி திருட்டு...



புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் அருகே உள்ள குமரப்பன் வயல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பேரிடர் காலத்தில் எச்சரிக்கை ஒலியை எழுப்பும் கருவி அரசால் பொருத்தப்பட்டிருந்தது.

இதனை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பேரிடர் மழை, புயல் போன்றவற்றிற்கு ஒலியை எழுப்பி எச்சரிக்கை செய்து வந்துள்ளனர் இந்நிலையில் அந்த ஒலி பெருக்கி கடந்த 10 நாட்களாக இயங்கவில்லை. இதனால் இதனை சரிசெய்யும் பொறியாளர் கடலூரை சேர்ந்த தமிழ்வாணன் என்பவருக்கு அப்பகுதி ஊராட்சி தலைவர் தகவல் கொடுத்துள்ளனர். 

தகவலின் அடிப்படையில் நேற்று அவர் வந்து அதனை பார்த்தார். அப்போது அதில் இருந்த 2 பேட்டரிகள் இருந்ததில் ஒரு பேட்டரி மட்டும் இருந்தது. ஒரு பேட்டரியை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். 

இதனையடுத்து அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் காளிமுத்து மீமிசல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். பேட்டரியின் மதிப்பு ரூ.9,800 ஆகும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து மீமிசல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments