GPM மீடியா செய்தி எதிரொலியாக கொடிக்குளம் மின்வாரிய உதவி பொறியாளர் (AE) நேற்று 18.11.2020 கோபாலப்பட்டிணத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
புதுக்கோட்டை மாவட்டம் நாட்டானிபுரசக்குடி ஊராட்சியை சேர்ந்த கோபாலப்பட்டிணம் கடற்கரையில் எலும்பு கூடாக காட்சி அளிக்கும் மின்கம்பங்களை மாற்ற மின்வாரிய அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை.!! என கடந்த 16.11.2020 அன்று GPM மீடியாவில் செய்தி வெளியிட்டிருந்தோம். அந்த செய்தியின் எதிரொலியாக நேற்று கோபாலப்பட்டிணத்திற்கு கொடிக்குளம் மின்வாரிய உதவி பொறியாளர் (AE) அவர்கள் வருகை புரிந்தார்கள்.
அதனடிப்படையில் கோபாலப்பட்டிணத்தில் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பங்களை பார்வையிட்டார். அதன் பிறகு கூறுகையில் கோபாலப்பட்டிணத்தில் ஏற்கனவே ஆய்வு மேற்கொண்டதின் அடிப்படையில் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ள 18 மின்கம்பங்களை மாற்றுவதற்கு புதிய மின்கம்பங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது என கூறினார். மேலும் கூறுகையில் ஆள் பற்றாக்குறை காரணமாக புதிய மின்கம்பம் அமைக்கும் பணியில் தாமதம் ஏற்படுவதாகவும், கூடிய விரைவில் புதிய மின்கம்பம் அமைப்பதாக கூறினார்.
மேலும் கோபாலப்பட்டிணத்தில் வீடுகளில் இருக்கும் மரங்கள் மின் ஒயர்களில் உரசுவதால் அடிக்கடி மின்தடை ஏற்படுவதாகவும், குறைந்தழுத்த மின்சாரம் வருவதாக குற்றம்சாட்டினார். இதனால் மின் ஒயர்களில் உரசும் படி உள்ள மரக்கிளைகளை அகற்ற மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும்படி GPM மீடியாவிடம் கோரிக்கை விடுத்தார்.
ஆய்வின் போது நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி 7-வது வார்டு உறுப்பினர் சாதிக் பாட்சா, 5-வது வார்டு உறுப்பினர் அவர்களின் கணவர் ரபீக், அபு மற்றும் கேப்டன் யூசுப் ஆகியோர் உடனிருந்தனர்.
இதன்மூலம் எங்கெல்லாம் மின் ஒயர்களில் மரக்கிளைகள் உரசுகின்றதோ அவைளை அகற்ற GPM மீடியா வாயிலாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்து கொள்கின்றோம்.
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று உடனடியாக ஆய்வு மேற்கொண்ட கொடிக்குளம் மின்வாரிய உதவி பொறியாளர் (AE) அவர்களுக்கு GPM மீடியா சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.