கட்டணம் செலுத்திய அரியர் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி: மதுரை காமராசர், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகங்கள் அறிவிப்பு




தேர்வுக் கட்டணம் செலுத்திய அரியர் மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்படுவதாக மதுரை காமராசர், திருச்சி பாரதிதாசன் ஆகிய இரு பல்கலைக்கழகங்களும் அறிவித்துள்ளன.

தமிழகத்தில் கரோனா பரவல் காரணமாக கல்லூரிகளில் இறுதிப் பருவத் தேர்வு தவிர மற்ற அனைத்துத் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு, மாணவர்கள் தேர்ச்சி செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அரியர் பாடத் தேர்வுகளுக்குக் கட்டணம் செலுத்திய மாணவர்களுக்கும் தேர்வில் இருந்து விலக்கு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதனால், நீண்டகாலமாக அரியர் வைத்திருந்த மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    இதற்கிடையில், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் ஏஐசிடிஇ ஆகிய இரண்டும் அரியர் பாடங்களுக்குத் தேர்வின்றி தேர்ச்சி என்பதை ஏற்க மறுத்தன. மாணவர்களுக்குத் தேர்வு நடத்தி பின்னரே பட்டம் வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளன. இதுதொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது

இதற்கிடையில் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள 13 பல்கலைக்கழகங்களில் அண்ணா பல்கலைக்கழகம் தவிர்த்து மற்ற பல்கலைக்கழகங்கள் தேர்ச்சி வழங்க ஒப்புதல் அளித்துள்ளன. முதல் பல்கலைக்கழகமாக சென்னை பல்கலைக்கழகம் அண்மையில் அரியர் மாணவர்களுக்குத் தேர்ச்சி என்ற அறிவிப்பை வெளியிட்டது

இந்நிலையில், தற்போது மதுரை காமராசர் பல்கலைக்கழகம் மற்றும் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆகிய இரண்டும் அரியர் மாணவர்களுக்குத் தேர்ச்சி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளன. கட்டணம் செலுத்திய அரியர் மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments