வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தமிழகத்தில் நவம்பர் 21, 22 மற்றும் டிசம்பர் 12, 13-ந்தேதிகளில் சிறப்பு முகாம்.! தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவிப்பு.!!




வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தமிழகத்தில் நவம்பர் 21, 22 மற்றும் டிசம்பர் 12, 13-ந்தேதிகளில் சிறப்பு முகாம்.! தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவிப்பு.!!


தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இம்மாதம்(நவம்பர்) 21, 22 மற்றும் டிசம்பர் 12, 13-ந்தேதிகளில் சிறப்பு முகாம் நடத்தப்படும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு அறிவித்துள்ளார். இதுதொடர்பாக சத்யபிரத சாகு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

வரும் ஜனவரி 1-ந்தேதியை வாக்காளராகும் நாளாக கொண்டு வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்க முறை திருத்தம் செய்வதற்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தலைமைத்தேர்தல் அதிகாரி, அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார். 

இக்கூட்டத்தில், தொடர் திருத்தத்தின் போது முடிவு செய்யப்பட்ட படிவங்கள் பற்றிய தகவல்களும், சிறப்பு சுருக்க முறை திருத்தம் தொடர்பான கால அட்டவணைகளும் பகிர்ந்து கொள்ளப்பட்டன. இந்த ஆண்டிற்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பிப்ரவரி 14-ந்தேதி முதல் கடந்த மாதம் அக்டோபர் 31-ந்தேதி வரை பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம் தொடர்பாக மொத்தம் 9 லட்சத்து 48 ஆயிரத்து 512 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 



வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தத்திற்காக இந்திய தேர்தல் ஆணையம், கால அட்டவணையை அறிவித்துள்ளது. அதன்படி, ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் 16-ந்தேதி வெளியிடப்பட வேண்டும். இதில் பெயர் சேர்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகளுக்காக 16-ந்தேதியில் இருந்து அடுத்த மாதம் டிசம்பர் 15-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 

இந்த விண்ணப்பங்களை அளிப்பதற்காக 21, 22-ந்தேதிகள் (சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை), டிசம்பர் 12 மற்றும் 13 (சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை) ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறும். வரும் ஜனவரி 20-ந்தேதியன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments