ஓடும் பஸ்சில் தம்பதியிடம் 14 பவுன் நகைகள் திருட்டு  

 
        திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை அண்ணாநகரை சேர்ந்தவர் ஜெகநாதன் (வயது 70). ஓய்வுபெற்ற துப்பாக்கி தொழிற்சாலை ஊழியரான இவரும், இவரது மனைவி தனபாக்கியம் (67) என்பவரும் நேற்று புதுக்கோட்டையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றனர்.


பின்னர் அவர்கள் அங்கிருந்து, மீண்டும் சொந்த ஊருக்கு வருவதற்காக திருச்சி செல்லும் அரசு பஸ் ஏறி பயணம் செய்தனர். அப்போது தனபாக்கியம் தான் வைத்திருந்த தங்கச் சங்கிலி உள்ளிட்ட 14 பவுன் நகைகள் மற்றும் ரூ.7 ஆயிரம் ஆகியவற்றை ஒரு கைப்பையில் வைத்து, மற்றொரு பையில் அதனை போட்டு இருந்தார்.

ஓடும் பஸ்சில் திருட்டு

இதற்கிடையில் பஸ்சில் கைப்பையில் இருந்து பணத்தைஎடுத்து டிக்கெட் வாங்கி, மீண்டும் அதனுள் வைத்து இருந்தார். பின்னர்அவர்கள் மாத்தூர் ரவுண்டானா வந்ததும் பஸ்சை விட்டு இறங்கி பையை பார்த்தபோது அதில் தங்க நகை, பணம் உள்ளிட்டவை வைத்திருந்த கைப்பையை காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார். யாரோ நோட்டமிட்டு ஓடும் பஸ்சில் அதனை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து தனபாக்கியம் மாத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தனபாக்கியம் வைத்திருந்த நகை-பணம் வைத்திருந்த கைப்பையை திருடிய ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments