50 அடி ஆழம் கொண்ட கிணற்றில் தவறி விழுந்தவர் உயிருடன் மீட்பு.

புதுக்கோட்டை நிஜாம் காலனியில் உள்ள ஒரு வீட்டின் பின்புறத்தில் இருந்த செடிகொடிகளை சுத்தம் செய்ய வந்தவர்  அப்பகுதியில் இருந்த 50 அடி ஆழ கிணற்றுக்குள் தவறி விழுந்ததால் பரபரப்பு.


புதுக்கோட்டை நிஜாம் காலனி பகுதியில் வசித்து வருபவர் கமலம் இவரது வீட்டின் பின்புறம் செடி கொடிகள் மண்டிக் கிடந்தன இவற்றை சுத்தம் செய்வதற்காக முக்கண்ணாமலைப் பட்டியை சேர்ந்த சாதிக் வயது (55) என்பவர் கமலம் வீட்டின் பின்புறம் மண்டிக்கிடந்த செடிகொடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டார். அப்போது பின்புறத்தில் இருந்த 50 அடி ஆழம் கொண்ட கிணற்றின் அருகே இருந்த செடி கொடிகளை சுத்தம் செய்வதற்காக கிணற்றின் சுவற்றில் ஏறியவர் எதிர்பாராதவிதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்தார்.

இவரது அலறல் சத்தம் கேட்டு வீட்டின் உரிமையாளர் கமலம் மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது சாதிக்  கிணற்றுக்குள் தவறி விழுந்தது தெரியவந்தது. இதையடுத்து அப்பகுதியில் இருக்கும் பொதுமக்கள் உடனடியாக இது குறித்து புதுக்கோட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலின்பேரில் புதுக்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜராஜசோழன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து 50 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்த சாதிக்கை கயிறுகள் கட்டி கயிறுகள் மூலமாக அவரை உயிருடன் மீட்டு மேலே கொண்டு வந்தனர். அதிர்ஷ்டவசமாக அவருக்கு எந்தவித காயமும் ஏற்படாமல் நலமாக இருந்தார். வீட்டின் பின்புறம் மண்டிக்கிடந்த செடிகொடிகளை சுத்தம் செய்ய வந்த ஒருவர் அப்பகுதியில் இருந்த 50 அடி ஆழக் கிணற்றுக்குள் தவறி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments