பத்திரப் பதிவுக்கு பான் எண் அவசியம்: தமிழக அரசு
வணிகவரித்துறை செயலாளர் பீலா ராஜேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் வருமானவரிச் சட்டம் 1962-இன் படி, 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் பதிவு செய்யப்படும்போது பத்திரப்பதிவுடன் 'பான்' எண் இணைக்கப்பட்டிருந்தால் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

30 லட்சம் ரூபாய் மற்றும் அதற்கு மேற்பட்ட அளவிலான சொத்துக்கள் பதிவு செய்யப்படும்போது அந்த தகவல்கள் வருமானவரித்துறையுடன் பகிர்ந்து கொள்ளப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.தற்போதைய நிலவரப்படி பத்திரப்பதிவு படிவம் 60 மற்றும் 61-ஏ படிவங்கள் இணையதளத்தில் இருப்பதாகவும், அதில், குறிப்பிட்டுள்ளபடி முழு விவரங்களையும் பதிவு செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த தகவல்கள் அனைத்தும் வருமானவரித்துறையிடம் பகிர்ந்து கொள்ளப்படும்பட்சத்தில்,வருமானவரி கணக்கு தாக்கலின்போது சொத்துக்கள் யார் பெயரில் பதியப்பட்டுள்ளது என்பதை பார்க்க முடியும் என வருமானவரித்துறையினர் தெரிவிக்கின்றனர். மேலும், வருமானவரி தாக்கலின்போது சொத்துக்களின் மொத்த மதிப்பை குறிப்பிடப்படாவிட்டால், சொத்து பதிவு செய்யப்பட்ட அல்லது விற்பனை செய்த நபருக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

தமிழகம், நகரமயமாக்கப்பட்ட மாநிலம் என்பதால் சொத்துக்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட வழிகாட்டுதல் மதிப்பு அதிகளவில் இருந்து வருவதாக கூறப்படுகிறது. இதன்காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகள், கோவை, மதுரை போன்ற பெரு நகரங்களில் 10 லட்சம் ரூபாய்க்கு குறைவாக சொத்துக்களை பத்திர பதிவு செய்ய முடியாத நிலை இருப்பதாகவும் வழிகாட்டு மதிப்பு உயர்வால், சொத்துக்களின் மதிப்பு அதிகரிப்பதாகவும் அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.

மேலும் படிக்க...அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் இயங்கும் சென்னை புறநகர் மின்சார ரயில்சேவை.. யார் யார் பயணிக்கலாம்?மேலும், ஆவணப்பதிவுன் போது விற்பவர், வாங்குபவர் அளித்த பான் எண் போலியானவை என தெரியவந்தால் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்  என்றும் பதிவுத்துறைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments