மணமேல்குடி போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் காணாமல் போன செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு.!!மணமேல்குடி போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த ஓராண்டாக காணாமல் போன செல்போன்கள் குறித்த புகார்களின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர்.

செல்போன்களில் உள்ள ஐ.எம்.இ.ஐ. எண்கள் மூலம் விசாரணை நடத்தி அதனை பயன்படுத்தியவர்கள் இருப்பிடத்தை கண்டறிந்து சுமார் 9 செல்போன்களை போலீசார் மீட்டனர். 

பின்னர், அந்த செல்போன்களுக்கு உரியவர்கள் போலீஸ் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டு, இன்ஸ்பெக்டர் சாமுவேல்ஞானம் அவர்களிடம் செல்போன்களை ஒப்படைத்தார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments