உயிருடன் இருப்பவரை மரணித்துவிட்டார் என GPM மீடியா பெயரில் சில விஷமிகள் பரப்பிய வதந்தி....



கோபாலப்பட்டிணம்  சின்னப்பள்ளிவாசல் தெரு விஐபி நகர் சேர்ந்த M.ரகுமத்துல்லா.Msc அவர் மாரடைப்பில் மரணம் அடைந்தார் என உயிருடன் இருக்கும் ஒருவரை மரணித்துவிட்டார் என்று GPM மீடியா பெயரில் வாட்ஸ்அப் குழுமத்தில் வதந்தி பரப்பிய விஷமிகள்.

முற்றிலும் தவறான செய்தியை நேற்றைய தினம் (15.11.2020) GPM மீடியா பெயரில் பரப்பிய விஷமிகள்.

புதுக்கோட்டை மாவட்டம் கோபாலப்பட்டிணம் சின்னப்பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் M.ரகுமத்துல்லா. இந்நிலையில் நேற்று காலை வாட்ஸ்ஆப் குழுமத்தில் இவர் மாரடைப்பில் இறந்து விட்டதாக அதிகமானா வாட்ஸ்ஆப் குழுமங்களில் இந்த செய்தி தீயாக பரவியது. இதனிடையில் இந்த செய்தியை GPM மீடியா செய்தி வெளியிடும் வடிவில் அதை உருவாக்கி பகிர்ந்திருந்தனர். இந்நிலையில் ஏராளமான வாசகர்கள் GPM மீடியாவை தொடர்பு கொண்டு உங்கள் குழுமங்களில் மரண செய்தி வரவில்லையே ஆனால் ஊர் சார்ந்த ஏராளமான குழுமங்களில் நீங்கள் பதிவிடுவதை போன்று மரண செய்தி உலா வருவதாக கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

இந்நிலையில் முதற்கட்டமாக விசாரித்ததில் அவை வதந்தி என தெரியவந்தது. உயிருடன் உள்ள ஒருவரை மரணித்துவிட்டதாக செய்தி பரப்பிய விஷமிகள் பற்றிய தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. விரைவில் அவர் யார்.? GPM மீடியாவிற்கு அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு பதிவிட்டாரா..? அல்லது வேற எதுவும் நோக்கமா.? எதற்காக இந்த இழி செயலை செய்தார் போன்ற முழு விவரங்களை GPM மீடியாவில் தோலுரிக்கப்படும் என்று தெரிவித்துக்கொள்கின்றோம்.

M.ரகுமத்துல்லா அவர்கள் தற்பொழுது கேரளாவில் வேலை செய்து வருகிறார். பூரண உடல்நலத்துடன் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

GPM மீடியா-வை பொறுத்தவரையில் ஒரு செய்தியை வெளியிடும் முன் அதன் உண்மை தன்மை அறிந்து அதன் பிறகே வெளியிடுகிறோம் என இந்த தருணத்தில் தெரிவித்து கொள்கிறோம்.

குறிப்பு: GPM மீடியா-வில் மரண அறிவித்தல் மற்றும் அடக்க நேரம் அறிவித்தல் பற்றி உறவினர்கள் மற்றும்  ஊரில் இருக்கும் நபர்களிடம் முழுமையாக விசாரித்து பின்னர் GPM மீடியாவில் பகிர்ந்து வருகிறோம்.

إِنَّ الَّذِينَ يُحِبُّونَ أَنْ تَشِيعَ الْفَاحِشَةُ فِي الَّذِينَ آمَنُوا لَهُمْ عَذَابٌ أَلِيمٌ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ وَاللَّهُ يَعْلَمُ وَأَنْتُمْ لَا تَعْلَمُونَ (القرآن 24:19)   
விசுவாசங்கொண்டோர்கிடையில் இவ்வாறான மானக்கேடான விஷயம் பரவ வேண்டும் என விரும்பிகிறார்களோ நிச்சயமாக அத்தகையோர்களுக்கு இம்மை, மறுமையில் இழிவான வேதனை அவர்களுக்கு உண்டு. (அல்குர்ஆன் 24:19)

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِن جَاءكُمْ فَاسِقٌ بِنَبَأ فَتَبَيَّنُوا أَن تُصِيبُوا قَوْمًا بِجَهَالَةٍ فَتُصْبِحُوا عَلَى مَا فَعَلْتُمْ نَادِمِين. (القرآن 49:6)
நம்பிக்கை கொண்டோரே! குற்றம் புரிபவன் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால் ஒரு சமுதாயத்திற்கு அறியாமையால் நீங்கள் தீங்கு இழைக்காதிருப்பதற்காக அதைத் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்! (இல்லையேல்) நீங்கள் செய்ததற்காகக் கவலைப்படுவீர்கள். (திருக்குர்ஆன் 49:6)

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments