கோபாலப்பட்டிணத்தில் வெளுத்து வாங்கிய மழை.!! மாவட்டத்தில் அதிகபட்சமாக 28.4மிமீ மழை.!!கன்னியாகுமரி முதல் அந்தமான் வரையிலும் மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதால் தமிழக கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் கோபாலப்பட்டிணத்தில் இன்று 16.11.2020 அதிகாலை 4.30 மணியளவில் பெய்யத் தொடங்கிய மழை சுமார் மூன்று மணி நேரத்திற்கு மேலாக வெளுத்து வாங்கியது. புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிகபட்சகமாக மீமிசல் பகுதியில் 28.4 மிமீ மழை பெய்துள்ளது.
ஜுஆ பள்ளிவாசல் வாளகத்தில் தேங்கியுள்ள மழை நீர்

கோபாலப்பட்டிணத்தில் கடந்த சில வாரங்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் கோபாலப்பட்டிணத்தில் அவ்வப்போது கரு மேகங்கள் சூழ்ந்து கும்மிருட்டாய் காட்சியளித்து மலைப்பிரதேசம் போல அதிகமான குளிர் நிலவி வருகிறது.
விஐபி நகரில் வீட்டிற்குள் புகுந்த மழை நீர்

இந்த மழையால் கோபாலபட்டிணத்தில் உள்ள குளங்கள் வேகமாக நிரம்பி வருகிறது. முக்கிய பகுதிகளில் உள்ள சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியது. நீா்வரத்து ஓடைகளில், தாழ்வான பகுதியில் குளம் போல் தண்ணீர் தேங்கி நின்றது. பல இடங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் மழைநீர் புகுந்தது.


மழையால் வெப்பம் தணிந்து குளிா்ந்த சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

நாளை 17.11.2020 புதுக்கோட்டை, கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments