புதுக்கோட்டையில் கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம் தயாரிக்க திட்டக்குழு உறுப்பினர்களுக்கு பயிற்சிபுதுக்கோட்டை மாவட்டத்தில் கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம் தயாரிப்பதற்கான பயிற்சி வகுப்புகள் முதல் கட்டமாக 7 ஒன்றியங்களில் நடைபெற்று வருகின்றது.

இந்த பயிற்சி வகுப்புகளில் 73 வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம், தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994, மூன்றடுக்கு ஊராட்சி, நிலைகுழுக்கள், கிராம ஊராட்சியின் வருவாய் இனங்கள், கிராம ஊராட்சியின் கடமைகள், நீடித்த நிலைத்த வளர்ச்சிக்கான இலக்குகள், கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம் தயாரிக்க 18 படி நிலைகள், வளர்ச்சி திட்டம் தயாரித்தலில் பிறதுறை அலுவலர்களின் பங்கு, வளர்ச்சித்திட்டம் ஒப்புதல் பெற கிராமசபையின் முக்கியத்துவம் ஆகியவைகளை கொண்டு மக்கள் பங்கேற்புடன் கிராம வளர்ச்சிக்கு தேவையான கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம் தயாரிப்பதற்கான மக்கள் திட்டமிடல், இயக்க திட்ட குழு உறுப்பினர்களுக்கு செயல்வழி கற்றல் முறையில் பங்கேற்பாளர்கள் பங்களிப்புடன் பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றது. 

இந்த பயிற்சியானது அன்னவாசல், அறந்தாங்கி, கறம்பக்குடி, குன்றாண்டார்கோவில், விராலிமலை பொன்னமராவதி, திருவரங்குளம் ஆகிய ஒன்றியங்களில் பயிற்சி நடைபெற்று வருகின்றது. 

இந்த பயிற்சி மையங்களில் பயிற்சியாளர்களாக ரவிச்சந்திரன், சிவகுமார், சைவராசு, ராஜ்குமார், மகேந்திரன், சேக்முகமது, முத்துக்குமார், சுந்தரபாண்டி, விமலா, வித்யா, மல்லிகா, வெள்ளையம்மாள், உமாவதி, இந்திரா ஆகியோர்கள் பயிற்றுநர்களாக பயிற்சியளித்து வருகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments