கறம்பக்குடி பகுதியில் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான லாட்டரி சீட்டுகள் பறிமுதல்...கறம்பக்குடி பகுதியில் அரசால் தடைசெய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாகவும், இதனால் கூலி தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதாகவும், போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.

அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையிலான போலீசார் கறம்பக்குடி மீன் மார்க்கெட், திருவோணம் சாலை, அம்புக்கோவில் முக்கம் ஆகிய பகுதிகளில் திடீர் சோதனை நடத்தினர். 

அப்போது அந்த பகுதிகளில் லாட்டரி சீட்டுகளை விற்றுக்கொண்டிருந்த தெற்கு புதுதெருவைச் சேர்ந்த நைனா முகமது (வயது 27), வாணிய தெருவைச் சேர்ந்தமுகமது பஷீர் (39), கறம்பக்குடி நாகராஜ் (55) ஆகியோர் போலீசாரை கண்டதும் லாட்டரி சீட்டுகளை போட்டுவிட்டு தப்பி ஓடினர். 

இதையடுத்து அவர்கள் விட்டுச்சென்ற ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள லாட்டரி சீட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து கறம்பக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments