வாக்காளர் பட்டியலில் புதுக்கோட்டை கலெக்டரின் பெயரில் பிழை... திருத்த அறிவுறுத்தினார்...



தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 16-ந் தேதி வெளியிடப்பட்டது. இதில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தும் பணி நடந்து வருகிறது.

அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்திலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க நேற்று சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த நிலையில் புதுக்கோட்டையில் கலெக்டர் பங்களா எதிரே உள்ள பிரகதாம்பாள் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் நடந்த சிறப்பு முகாமை கலெக்டர் உமா மகேஸ்வரி பார்வையிட்டார். 

அப்போது புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலில் தனது பெயரை பார்த்தார். அப்போது அதில் உமா மகேஸ்வரியின் பெயரில் கடைசி எழுத்தில் ‘ரி‘க்கு பதிலாக மி போன்று பிழை இருந்தது. அப்போது அதனை திருத்த அங்கிருந்த பணியாளர்களிடம் அறிவுறுத்தினார். மேலும் பெயரை திருத்துவதற்கான விண்ணப்ப படிவத்தை வாங்கிச் சென்றார். 

இதற்கிடையில் புதுக்கோட்டையில் இதற்கு முன்பு கலெக்டராக பணியாற்றிய கணேஷ் பெயரும் அதில் இருந்தது. அதனையும் பார்த்த அவர், அதனை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஊழியர்கள் தெரிவித்தனர். வாக்காளர் பட்டியலில் கலெக்டரின் பெயர் பிழை இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments