கோபாலப்பட்டிணம் காட்டுகுளம் பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று பெண்கள் கரையில் கருவேல மரங்கள் அகற்றம்... TNTJ கோபாலப்பட்டிணம் கிளை நிர்வாகிகள் நடவடிக்கை.!!கோபாலப்பட்டிணம் கட்டுக்குளம் பெண்கள் பகுதியில் காடுபோல் அடர்ந்திருந்த கருவேல மரங்களை அகற்றி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட TNTJ கோபாலப்பட்டிணம் கிளை நிர்வாகிகள்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் கோபாலப்பட்டிணம் கிளை சார்பாக நேற்று (21.11.2020) சனிக்கிழமை கோபாலப்பட்டிணம் காட்டுகுளம் பெண்கள் பகுதியில் குளத்திற்கு செல்லும் வழியில் கருவேல மரங்கள் நிறைந்து இடையூறாகவும், இரவு நேரங்களில் செல்ல முடியாத நிலையில் இருந்து வந்தது,.

இந்நிலையில் அப்பகுதி மக்கள் TNTJ கோபாலப்பட்டிணம் கிளை நிர்வாகிகளிடம் கருவேல மரங்களை அகற்ற வேண்டி கோரிக்கை வைத்தனர். மக்களின் கோரிக்கைகளை ஏற்று மக்கள் செல்லும் பகுதியில் உள்ள கருவேல மரங்கள், குளத்தின் உள்ளே குளிப்பதற்கு இடையூறாக இருந்த கருவேல மரங்கள் மற்றும் மக்களுக்கு நோய் ஏற்படுத்தும் விதமாக உள்ள குப்பைகளையும் TNTJ கோபாலப்பட்டினம் கிளை நிர்வாகத்தின் சார்பாக சுத்தம் செய்யப்பட்டது.
 
தகவல்:
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
கோபாலப்பட்டினம் கிளை
புதுக்கோட்டை மாவட்டம்
88702 21552

இனி வரும் காலங்களில் இது போன்ற பணிகளை ஊராட்சி மன்ற நிர்வாகத்தின் கவனத்திற்கு எடுத்து சென்று நடவடிக்கை எடுக்க முயற்சி செய்யுங்கள்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments