புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மகளிர் அம்மா இருசக்கர வாகனம் பெற விண்ணப்பிக்கலாம்.. கலெக்டர் தகவல்.!!



புதுக்கோட்டை மாவட்டத்தில் அம்மா இரு சக்கர வாகனத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என கலெக்டர் பி.உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

இது குறித்து கலெக்டர் தெரிவித்ததாவது, அம்மா இரு சக்கர வாகனத் திட்டத்தின் கீழ், புதுக்கோட்டை மாவட்டத்தில் 2020 -21ம் ஆண்டிற்கு 2334 உழைக்கும் மகளிருக்கு வழங்கிட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 2020 -21ம் ஆண்டுக்கான ‘அம்மா இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டம்” மகளிர் பணிபுரியும் இடங்கள் மற்றும் பிற இடங்களுக்கு செல்ல இரு சக்கர வாகனங்கள் வாங்கிட நகரப்புறம் மற்றும் ஊரகப் பகுதிகளில் வசிக்கும் கீழ்காணும் தகுதியுடைய மகளிரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 

கல்வித் தகுதி 5-ம் வகுப்பு, வயது 18 முதல் 45 வயது வரை, ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்குள், ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டும், ஆதரவற்ற விதவை, மகளிரை குடும்பத் தலைவராக கொண்டவர்கள், கணவரால் கைவிடப்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள், திருமணம் ஆகாத 35 வயதுக்கு மேற்பட்ட முதிர் கன்னிகள், தாழ்த்தப்பட்டவர், பழங்குடியினர், திருநங்கைகள் போன்றவர்கள் விண்ணப்பிக்கலாம். 

மேலும் அமைப்பு சார்ந்த, அமைப்பு சாராத, தனியார் நிறுவனங்கள், அரசு திட்டங்களை செயல்படுத்தும் நிறுவனம், சமுதாயம் சார்ந்த அமைப்புகள் சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர், சமுதாய சுகாதார பணியாளர் மற்றும் சுய தொழில் புரிவோர், ஒத்த தொழில் குழுவில் பணிபுரிந்து வாழ்வாதார செயல்பாடுகளில் தொடர்ந்து ஈடுபடுவோர் விண்ணப்பிக்கலாம்.

இருசக்கர வாகனத்திற்கான விலைப்புள்ளி இரு சக்கர வாகனத்திற்கான 125சிசி-க்கு உட்பட்ட திறன் கொண்ட வாகனம் மட்டுமே வாங்கப்பட வேண்டும். இத்திட்டத்தில் 50 சதவீதம் மானியம் அதிகபட்சம் ரூ.25,000 அரசும், மீதமுள்ள தொகையை பயனாளிகளும் செலுத்திக் கொள்ள வேண்டியது. மகளிர் மாற்றுத்திறனாளிகளுக்கு மானியம் ரூ.31,250 வழங்கப்படும். 

பேரூராட்சிப் பகுதியெனில் பேரூராட்சி செயல் அலுவலரிடமும்/ நகராட்சி எனில் சம்மந்தப்பட்ட நகராட்சி ஆணையரிடமும் ஊரகப் பகுதி எனில் சம்மந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) அவர்களிடமும் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய சான்றிதழ்களுடன் தொடர்புடைய அலுவலரிடம், சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த நபர்களுக்கு அரசு விதி முறைகள் மற்றும் கள ஆய்வு அடிப்படையில் பயனாளிகள் இறுதி செய்யப்படுவார்கள். 

எனவே, புதுக்கோட்டை மாவட்ட நகர்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளிலுள்ள தகுதியான பெண்கள் முன்னோடி திட்டமான அம்மா இரு சக்கர வாகன திட்டத்தின்கீழ் பயன்பெற்று தங்கள் பயணத்தை எளிதாக்கி பணியினை சிறப்புடன் செய்திட கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கலெக்டர் பி.உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

தகுதி:
  • நகர்ப்புறம் மற்றும் ஊரகப் பகுதிகளில் வசிக்கும் கல்வி தகுதி 8ஆம் வகுப்பு.
  • 18 முதல் 40 வயது வரை.
  • ஆண்டு வருமானம் ரூ. 2.50 லட்சம்.
  • ஒரு குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு மட்டுமே வழங்கப்படும். 

விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய சான்றிதழ்கள்:
  • வயதுச் சான்றிதழ், 
  • புகைப்படம், 
  • இருப்பிடச் சான்று (வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை, மின் கட்டண ரசீது), 
  • இரு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம், 
  • வருமானச் சான்று (தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தால் துறைத் தலைவர், சுய சான்று),
  • வேலை பார்ப்பதற்கான பணிச் சான்று, 
  • தொடர்புடைய நிறுவனத் துறைத் தலைவரால் வழங்கப்பட்ட ஊதியச் சான்று, ஆதார் அட்டை, 
  • 8 ஆம் வகுப்புக்கான கல்விச் சான்று, 
  • மாற்றுச் சான்றிதழ், 
  • முன்னுரிமை பெறத் தகுதியுள்ளவர்கள் அதற்கான சான்றிதழ்களை இணைக்க வேண்டும், 
  • சாதி சான்று, 
  • மாற்றுத் திறனாளியெனில் தேசிய அடையாள அட்டை.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments