TNTJ கோபாலப்பட்டிணம் கிளை சார்பாக பேரிடர் கால உதவிக்குழு தொலைபேசி எண் அறிவிப்பு.!!



TNTJ கோபாலப்பட்டிணம் கிளை சார்பாக பேரிடர் காலங்களில் களப்பணியற்றுவது குறித்து நிர்வாகிகள் மஷுரா நடைபெற்றது.

மீமிசல் சுற்று வட்டார மக்களுக்கு நிவார் புயல் மற்றும் கடும் மழை குறித்து எச்சரிக்கை.!!

இந்தியா வானிலை மையம் தமிழகத்திற்கு ரெட் அலர்ட் விடுத்துள்ளது. நவம்பர் 25 தமிழகத்தின் டெல்டா பகுதியில் கடும் மழை பெய்யும் என்றும் நவம்பர் 25 மாலை 7 மணி முதல் நவம்பர் 26 காலைக்குள் 135 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் வீச கூடும் என்றும் அது புதுக்கோட்டை திருவாரூர், தஞ்சை போன்ற டெல்டா மாவட்டங்களுக்கு எச்சரிக்கையாக இருக்க கூறியுள்ளனர்.

கடலோர பகுதியில் உள்ள மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் மழையும், புயலும் சேர்ந்து பாதிப்பை ஏற்படுத்தும் என வானிலை நிபுனர் கூறியுள்ளனர்.

அத்தகைய தேதிகளில் பயணத்தை தவிர்த்து வீட்டில் பாதுகாப்பான முறையில் இருக்க வேண்டும் என்றும் தங்களுக்கு தேவையான பொருள்களை வாங்கி வைத்து கொள்ளுமாறு TNTJ கோபாலப்பட்டிணம் கிளை சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.

எனவே இந்த நேரத்தில் மக்களுக்கு பேரிடர் காலங்களில் எவ்வாறு களப்பணியாற்ற வேண்டும் என்று நேற்று (22-11-2020) இஷா தொழுகைக்கு பிறகு கிளை நிர்வாகிகள் மஷுரா நடைபெற்றது.

மஷுராவில் மக்களுக்கு பேரிடர் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் பேரிடர் காலங்களில் எவ்வாறு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் பேரிடர் காலங்களில் மக்களை பாதுகாக்க எவ்வாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மஷுரா நடைபெற்றது.

மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக TNTJ கோபாலப்பட்டிணம் கிளை சார்பாக பேரிடர் காலங்களில்  களத்தில் பணியாற்றுவதற்கு பேரிடர் குழு தயாரான  நிலையில் உள்ளது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

தகவல்:
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
கோபாலப்பட்டினம் கிளை
புதுக்கோட்டை மாவட்டம்
88702 21552

பேரிடர் காலங்களில் தொடர்புக்கு:

கிளை தலைவர் - அப்துல் ரசாக் - 97155 03699

கிளை செயலாளர் - செய்யது இபுராகிம் - 98651 69445

கிளை பொருளாளர் - இமாம் தீன் - 9965188283

கிளை துணை செயலாளர் - மகாதீர் முகமது - 9597270801

மாணவரணி - ரியாஸ் கான் - 8056705792

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments