புதுக்கோட்டை மாவட்டத்தில் மீட்பு பணிக்கு தயார் நிலையில் போலீசார்.!



‘நிவர்’ புயலால் புதுக்கோட்டை மாவட்டத்தில் அதி தீவிர கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

மீட்பு பணியில் போலீசாரும் ஈடுபடுவதற்கு தயார்நிலையில் உள்ளனர். இதற்காக பேரிடர் மேலாண்மை மீட்பு பணி பயிற்சி படித்து முடித்த 65 போலீசார் 2 குழுக்களாக பிரிக்கப்பட்டு புதுக்கோட்டை, அறந்தாங்கி பகுதியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 

இந்த குழுவினருக்கு உபகரணங்களை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நேற்று தயாராக எடுத்து வைக்கப்பட்டன. இதனை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பார்வையிட்டார். மேலும் போலீசாருக்கு ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகளை அவர் வழங்கினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments