மீமிசல் பகுதியில் விதிகளை மீறும் 'ஓன் போர்டு கார்கள்'; வாழ்வாதாரத்தை இழக்கும் டிபோர்டு ஓட்டுனர்கள்.. வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மனு.!!மீமிசல் பகுதியை சேர்ந்த வாடகை வாகன உரிமையாளர்கள் 50-க்கும் மேற்பட்டோர் அறந்தாங்கி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர்.

அந்த மனுவில், ஆண்டுதோறும் நாங்கள் அரசுக்கு எப்.சி, சாலைவரி, இன்சூரன்ஸ் போன்ற கட்டணங்களை செலுத்தி தொழில் செய்து வருகிறோம். ஆனால் நாங்கள் தொழில் செய்யும் இடத்தில் சொந்த வாகனங்கள் வைத்திருப்பவர்கள் குறைந்த வாடகை கட்டணத்தில் வாகனங்களை இயக்குவதால் எங்கள் தொழில் பாதிக்கப்படுகிறது. 

ஏற்கனவே கொரோனா பாதிப்பில் வாழ்வாதரத்தை இழந்த நிலையில் சொந்தவாகனங்கள் வைத்திருப்பவர்களாலும் பாதிக்கப்பட்டுள்ளோம். எனவே மீமிசல் பகுதியில் ஆய்வு செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து எங்களது வாழ்வாதரத்தை காப்பாற்ற வேண்டும் என கூறியிருந்தனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று அவர்கள் அறிவித்துள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments