பாதுகாப்பு மையங்களாக பள்ளிவாசல்கள் திகழட்டும்: -தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு.!தமிழகத்தில் முக்கிய சில மாவட்டங்களை தாக்கும் அபாயம் உள்ளதால்  ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

இரண்டு நாட்கள் கடும் மழை பெய்யும் என்றும் செய்திகளில் கூறப்படுகிறது.

இது போன்ற சூழலில் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். வெளியே  செல்வதை தவிர்க்க வேண்டும். 

தற்போது எதிர் நோக்கி இருக்கும் நிவர் புயல் பாதிப்பில் இருந்து மக்களை காக்கவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பணி செய்யவும் களம் இறங்கி பணியாற்ற தவ்ஹீத் ஜமாஅத் தொண்டர்கள் தயாராக இருங்கள்.

பாதிக்கப்பட்ட மக்களை, பாதுகாப்பாக தங்க வைக்க பள்ளிவாசல்களை பயன் படுத்துங்கள். பாதிக்கப்பட்ட மக்களின் பாதுகாப்பு மையமாக பள்ளிவாசல்கள் விளங்கட்டும்.

ஏழை எளிய மக்களுக்காக பள்ளிவாசல்கள் திறந்தே இருக்கட்டும்.

பிறர் நலம் நாடுவதே இஸ்லாம் என்ற நபிகள் நாயகத்தின் கூற்றை உண்மை படுத்திடும் வகையில் மக்கள் துயர் துடைக்கும் வகையில்   களமிறங்கி அவர்களுக்கு தேவையான  உதவிகளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டர்கள் செய்து கொடுக்க தயாராக இருக்கவும். 

இப்படிக்கு,
இ.முஹம்மது,
மாநில பொதுச் செயலாளர்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments