புதுக்கோட்டையில் கருத்தடை விழிப்புணர்வு பிரச்சார வாகனம்: கலெக்டர் துவக்கி வைத்தார்புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் மாவட்ட குடும்பநல அமைப்பின் சார்பில் உலக நவீன வாசக்டமி இருவார விழா விழிப்புணர்வு ரதத்தினை கலெக்டர் பி.உமாமகேஸ்வரி இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.
 
பின்னர் கலெக்டர் தெரிவித்ததாவது, உலக நவீன வாசக்டமி இருவார விழாவினை முன்னிட்டு 21.11.2020 முதல் 27.11.2020 வரை ஆண்களுக்கான நவீன வாசக்டமி விழிப்புணர்வு வாரமாகவும், அதனை தொடர்ந்து 28.11.2020 முதல் 4.12.2020 வரை வாசக்டமி கருத்தடை சிகிச்சை மேற்கொள்ளும் வாரமாகவும் அனுசரிக்கப்பட உள்ளது. இதன் ஒருபகுதியாக இன்று ஆண்களுக்கான நவீன குடும்பநல கருத்தடை முறை விழிப்புணர்வு ரதம் துவக்கி வைக்கப்பட்டது. 

இந்த விழிப்புணர்வு ரதம் 4 பக்கமும் நவீன வாசக்டமி குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் மற்றும் ஒலி பெருக்கி மூலம் குடும்பநல விழிப்புணர்வு பாடல்கள், நவீன வாசக்டமி குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் மூலமாகவும் மாவட்ட அளவில் அனைத்து பகுதிகளிலும் அந்தந்த வட்டார ஆரம்ப சுகாதார களப்பணியாளர்களுடன் இணைந்து நவீன ஆண் குடும்ப நல கருத்தடை முறை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

மேலும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிறப்பு குடும்பநல ஆண் கருத்தடை முகாம்கள் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்முறையின் மூலம் கருத்தடை மேற்கொள்ளும் ஆண்களுக்கு மயக்க மருந்து கொடுப்பதில்லை, எளிமையாக ஓரிரு நிமிடங்களில் செய்து விடலாம். தையல் போடுவது இல்லை எனவே தழும்பு தெரியாது. சிகிச்சை முடிந்தவுடன் உடனடியாக வீட்டிற்கு செல்வதுடன், 2 மணிநேரத்திற்கு பின்னர் சாதாரண வேலைகளை செய்யலாம். 

நவீன ஆண் குடும்பநல கருத்தடை செய்யும் ஆண்களுக்கு ஊக்கத் தொகையாக ரூ.1,100-ம், ஊக்குவிப்பு தொகையாக ரூ.200ம் அரசால் வழங்கப்படுகிறது. எனவே தகுதியான தந்தைமார்கள் இத்திட்டத்தில் பங்குபெற்று பயன்பெற வேண்டும். இவ்வாறு கலெக்டர் பி.உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளார். இந்நிகழ்ச்சியில் துணை இயக்குநர்கள் மலர்விழி (குடும்ப நலம்), முத்துபாண்டி (காசநோய்) உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments