பிபிசியின் டாப் 100 பெண்கள்.. கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் இசைவாணி - பா. ரஞ்சித் மகிழ்ச்சி.!!இயக்குனர் பா. ரஞ்சித்தின் ஆதரவோடு  உருவாக்கப்பட்ட இசைக்குழு கேஸ்ட்லெஸ் கலக்ட்டிவ். சென்னையின் இசையான கானாவை, ராக், ரேப்போடு கலந்து, புதுவிதமான இசையை தருகிறது இந்த இசைக்குழு. சமூக கொடுமைகளுக்கு எதிரான புரட்சி குரல்களே இந்த குழுவின் அடையாளம்.

பிபிசி ஊடகம் வருடந்தோறும், உலகின் டாப் 100 பெண்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. தற்போது வெளியிடப்பட்டுள்ள, 2020 ஆம் ஆண்டுக்காண பிபிசி-யின் டாப் 100 பெண்கள் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறார் கேஸ்ட்லெஸ் கலக்ட்டிவ் குழுவின் பாடகர் இசைவாணி. 

டாப் 100 பெண்கள் பட்டியலை வெளியிட்ட பிபிசி, பட்டியலில் இருக்கும் ஒவ்வொருவரையும் தேர்வு செய்ததற்கான காரணத்தையும் கூறியுள்ளது. அதில், "தமிழகத்தில் வடசென்னையின் உழைக்கும் மக்களிடமிருந்து உருவானது கானா இசை. இசைவாணி, அந்த கானா இசையின் தனித்துவமான பாடகர். ஆண் ஆதிக்கமிக்க இந்தத் துறையில், பல வருடங்களாக பாடி வருகிறார் இசைவாணி. பிரபலமான ஆண் பாடகர்களோடு, ஒரே மேடையில் பாடுவதே சாதனையாக கருதப்படுகிறது. இசைவாணி, வெற்றிகரமாக பழைய சம்பிரதாயங்களை உடைத்துள்ளார். அது மற்ற, இளம் பெண் கானா பாடகர்களை, பாட முன்வரவைத்துள்ளது" என  இசைவாணிக்கு புகழாரம் சூட்டியுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments