புதுக்கோட்டையில் போலீசார் கொடி அணி வகுப்பு...புதுக்கோட்டை மாவட்டத்தில் போலீசார் எந்த நேரமும் உஷாராக உள்ளனர், போலீசார் எதையும் சமாளிப்பதற்கு தயார் நிலையில் உள்ளனர் என்பதை பொது மக்களுக்கு எடுத்துரைக்கும் விதமாகவும், பொதுமக்கள் அச்சம் இல்லாமல் வாழ்வதற்கு போலீசார் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கையை எடுத்து வருவதற்கு தயார் நிலையில் உள்ளனர் என்பதை குறிக்கும் வகையில் புதுக்கோட்டை நகரில் போலீசாரின் கொடி அணிவகுப்பு நடந்தது.

புதுக்கோட்டை பொது அலுவலகத்தில் இருந்து தொடங்கிய அணிவகுப்பு மேல ராஜ வீதி, வடக்கு ராஜ வீதி உள்ளிட்ட நகரின் முக்கிய வீதி வழியாக சென்று புதிய பஸ் நிலையத்தில் முடிவடைந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமை தாங்கி நடத்தினார். 

அணிவகுப்பில் 3 கூடுதல் துணை சூப்பிரண்டு, 4 துணை சூப்பிரண்டு, 4 இன்ஸ்பெக்டர், 4 சப்-இன்ஸ்பெக்டர், புதுக்கோட்டை மாவட்ட ஆயுதப்படை போலீசார் 50 பேரும், அதிவிரைவுப் படையினர் 172 பேரும், தமிழ்நாடு சிறப்புக் போலீஸ் படையினர் 80 பேரும் பங்கேற்றனர்.

போலீசார் பாதுகாப்பு வாகனங்களான வஜ்ரா, கூட்டத்தை கலைப்பதற்காக தண்ணீர் பீச்சி அடிக்கும் வாகனம் உள்ளிட்ட வாகனங்கள் அணிவகுத்து சென்றன. போலீசாரின் இந்த திடீர் கொடி அணிவகுப்பு பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments