மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெற்ற ஆவணத்தான்கோட்டை அரசுப் பள்ளி மாணவிகளுக்கு அறந்தாங்கி கல்வி மாவட்ட அலுவலர் வாழ்த்து
    
    மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெற்ற ஆவணத்தான்கோட்டை அரசுப் பள்ளி மாணவிகளுக்கு அறந்தாங்கி கல்வி மாவட்ட  அலுவலர் வாழ்த்து

மாநில அளவில் கதைகூறல் போட்டியில் வெற்றி பெற்ற புதுக்கோட்டை மாவட்டம்  ஆவணத்தான்கோட்டை  அரசுப் பள்ளி மாணவிகளுக்கு அறந்தாங்கி  கல்வி மாவட்ட  அலுவலர் திராவிட செல்வம்  வாழ்த்து

அறந்தாங்கி கல்வி மாவட்டத்தில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆவணத்தான்கோட்டை மேற்கு பள்ளி சார்பாக மாநில அளவிலான கதைகூறல் போட்டி நடைபெற்றது. போட்டியில் 250 மேலான மாணவிகள் பங்கு பெற்றனர். இப்போட்டியில்  6 முதல் எட்டாம் வகுப்பு பிரிவில் மேற்பனைக்காடு மாணவி சஹானா முதலிடம் பெற்றார் மற்றும் ஆவணத்தான்கோட்டை பள்ளி கவிநயா ஸ்ரீ 3 -5 பிரிவிலும், வசீகரன் 1 -2 பிரிவிலும் இரண்டாம் இடங்களை வெற்றி பெற்று இருந்தனர். இவர்களுக்கு இன்று மாவட்ட கல்வி அலுவலகத்தில் மாவட்ட கல்வி அலுவலர் உயர்திரு . திராவிடச் செல்வம் அவர்கள் பொன்னாடைகள் போர்த்தியும், ரொக்க பரிசும் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்கள். இந்நிகழ்ச்சியில் ஆவணத்தான்கோட்டை மேற்கு பள்ளி தலைமையாசிரியர், ஆங்கில ஆசிரியர் மற்றும் மேற்பனைக்காடு உறங்கா விதைகள் அமைப்பின்  வெங்கடேஷ் அவர்களும் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments