விவசாயிகளுக்கு ஆதரவாக மீமிசலில் முழு கடையடைப்பு.! வெறிச்சோடிய கடைவீதி.!!புதிய வேளாண் சட்டத்தை திரும்பப்பெற கோரி தில்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்துக்கு ஆதரவாக புதுக்கோட்டை மாவட்டம்  கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மீமிசலில்  முழு கடையடைப்புப் போராட்டம் நடத்தப்படுகிறது.

விவசாயிகளுக்கு ஆதரவாக வணிகர் சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளதால் மீமிசல் கிழக்கு கடற்கரை சாலை கடைவீதி, தொண்டி ரோடு, அறந்தாங்கி ரோடு, பட்டுக்கோட்டை ரோடு உள்ளிட்ட அனைத்து பகுதியில் வணிக கடைகள் மூடப்பட்டுள்ளன. 

விவசாயிகளுக்கு ஆதரவாக தேநீர் கடைகளும் அடைக்கப்பட்டன. தினசரி மார்க்கெட், உழவர் சந்தை செயல்படவில்லை. . 

ஓரிரு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டநிலையில் பயணிகள் குறைந்தளவே இருந்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments