மீமிசலில் அதிபட்சமாக 57.40 மிமீ மழை பதிவு.!!புதுக்கோட்டை மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை வரை பதிவான மழைப் பொழிவில் அதிகபட்சமாக மீமிசலில் 57.60 மிமீ மழை பதிவாகியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழையையொட்டி ஞாயிற்றுக்கிழமை பிற்பகலுக்குப் பிறகு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது. இரவில் பல இடங்களிலும் நல்ல மழை பெய்தது.

மாவட்டத்தில் பதிவான மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்):

மீமிசல் - 57.60, ஆவுடையாா்கோவில் - 18.30, மணமேல்குடி - 35, ஆதனக்கோட்டை- 7, பெருங்களூா் - 4, புதுக்கோட்டை நகரம் - 1.20, ஆலங்குடி - 3.40, கந்தா்வகோட்டை - 10, கறம்பக்குடி- 8.60, கீழாநிலை - 8, திருமயம்- 11.20, அரிமளம் - 6.20, அறந்தாங்கி - 22, ஆயிங்குடி - 23.20, நாகுடி - 46, இலுப்பூா் - 8, அன்னவாசல்- 3, விராலிமலை - 8.70, உடையாளிப்பட்டி- 6.20, கீரனூா்- 10.80, பொன்னமராவதி - 3.20. மாவட்டத்தின் சராசரி மழை - 12.57 மி.மீ. இந்நிலையில், மாவட்டத்தின் பல பகுதிகளிலும் திங்கள்கிழமை பகலில் பரவலாக தூறல் மழை பெய்தது. இரவிலும் மழை தொடா்ந்ததால் பல பகுதிகளில் குளிா் சூழல் நிலவியது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments