புதுக்கோட்டை மாவட்டத்தில் புரெவி புயல் காரணமாக தற்போது பெய்துவரும் கனமழை காரணமாக மக்கள் முடிந்தவரை வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் லோக.பாலாஜிசரவணன் கேட்டுக்கொண்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
- மின்சாதனங்களை கையாளும்போதும், வாகனங்களில் செல்லும்போதும் கூடுதல் கவனத்துடன் செயல்பட அறிவுறுத்தப்படுகிறது.
- மேலும் மழைநீர் தேங்கக்கூடிய தாழ்வான பகுதிகளில் வசித்து வரும் பொதுமக்கள் அந்த பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள புயல் பாதுகாப்பு மையங்களில் தங்கிக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.
- மேலும் சாலையோரங்களில் உள்ள மின் கம்பங்கள், மரங்கள் மற்றும் மழை காரணமாக ஈரப்பதமான வீட்டுச்சுவர்கள் உள்ளவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்கவேண்டும்.
- வாகனங்களை மரங்களின் அருகில் நிறுத்துவதை தவிர்க்கவும், இடியும் தருவாயில் உள்ள பழுதடைந்த மற்றும் உறுதித்தன்மையில்லாத பழைய வீடுகள், கட்டிடங்களில் வசிப்பவர்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களில் சென்று தங்க அறிவுறுத்தப்படுகிறது.
மேலும் மழையின் காரணமாக ஏதேனும் அவசர உதவி தேவைப்பட்டால் 1) காவல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 94429-86179 2] ஹலோ போலீஸ் எண் 72939-11100 3) மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறை எண் 1077, 04322-222207 ஆகிய எண்களில் தொடர்புகொள்ள புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர். லோக.பாலாஜிசரவணன் தனது செய்தி குறிப்பில் கேட்டுக்கொண்டுள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.