டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக அறந்தாங்கியில் அனைத்து கட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டம்.!!அறந்தாங்கியில் டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக அனைத்து கட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் புதிய வேளான் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி 12-ஆம் நாளாக டெல்லியில் நடைபெற்று கொண்டிருக்கும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக இன்று 8.12.2020 அறந்தாங்கி தபால் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திமுக நகர செயலாளர் இரா , ஆணந்த், சிபிஎம் தாலுகா செயலாளர் தென்றல் கருப்பையா, மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் முபாரக்அலி, சிபிஐ மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் ராஜேந்திரன், காங்கிரஸ் கட்சி நகர தலைவர் வீராசாமி, சமாஜ்வாதி கட்சி மாவட்ட தலைவர் சரவணமுத்து ஆகியோர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இந்தியாவின் உயிர்நாடியான விவசாயத்தையும், விவசாயிகளையும் காக்க வேண்டும் என அனைத்து கட்சியினர் கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments