தமுமுக கோபாலப்பட்டிணம் கிளை நிர்வாகிகள் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி தலைவரை சந்தித்து மனு.!!மீமிசல் அருகேயுள்ள கோபாலப்பட்டிணம் கிராமத்தில் மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி கேபாலப்பட்டிணம் தமுமுக நிர்வாகிகள் நாட்டானிபுரசக்குடி ஊராட்சி மன்ற தலைவரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

இது குறித்து தமுமுக நிர்வாகிகள் நாட்டானிபுரசக்குடி ஊராட்சி மன்ற தலைவரிடம் மூன்று கோரிக்கை வலியுறுத்தி ஊராட்சி மன்ற அலுவலகத்தில்  மனு  அளித்துக் கூறியதாவது:

மனுவின் கோரிக்கை:

1.சாலை புதுப்பித்தல் கோரி மனு 

2.நூலகம் திறக்க கோரி மனு

3.அரசு அலுவலர்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தொலைபேசி எண்களை ஊராட்சி மன்ற அலுவலகம் நுழைவுவாயில் வைக்க வேண்டும்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம் நாட்டானிபுரசக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட மீமிசல் அருகேயுள்ள கோபாலப்பட்டிணம் கிராமத்தில் பல வருடங்களுக்கு முன்பு போடப்பட்ட சாலை தற்போது மழை பெய்து வருவதால்  குறிப்பாக 
பழைய காலனி , தோப்பு சாலை, நடுத் தெரு, அவுலியா நகர், தவ்ஹித் மர்கஸ், சின்ன பள்ளிவாசல் போன்ற சாலைகள் மிகவும் மோசமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் ,பொது மக்களும்,  பள்ளி, கல்லூரி மாணவர்களும் பெரியவர்கள் சிறயவர்கள் கடும் அவதிப்படுகின்றனர். .

பொது மக்களின் நலன் கருதி சாலை வசதியை  புதுப்பித்து ஊராட்சி மன்ற தலைவர் ஏற்படுத்தித் தர  வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறோம்.

நாட்டானிபுரசக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட கோபாலப்பட்டிணத்தில் இருக்க கூடிய நூலகத்தை திறந்து வைக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் நூலகத்துக்கு வெளியே உள்ள கருவேல மரங்களை அகற்றி தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அரசு அலுவலர்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தொலைபேசி எண்களை ஊராட்சி மன்ற அலுவலகம் நுழைவுவாயில் வைக்க வேண்டும். மூன்று கோரிக்கையும் விரைந்து செயல்படுத்தி தருமாறு ஊராட்சிமன்ற தலைவரிடம் கேட்டுக்கொள்கிறோம் .

இதில் தமுமுக கோபாலப்பட்டிணம் கிளை தலைவர் முகமது மசூது , தமுமுக கோபாலப்பட்டிணம் கிளை செயலாளர் ஹிதயாதுல்லா, தமுமுக ஆவுடையார்கோவில் ஒன்றிய துனை செயலாளர்  அசாருதீன், மமக ஆவுடையார்கோவில் ஒன்றிய துனை செயலாளர் வாசிம் அக்ரம், புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட ஊடக பிரிவு  செயலாளர் அசாருதீன் கலந்து கொண்டு  ஊராட்சி மன்ற தலைவரிடம் மனு அளித்தனர் .

தகவல்

தமுமுக 
கோபாலப்பட்டிணம் கிளை

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments