RTGS-ல் 24 மணிநேரமும் பணம் அனுப்பலாம்- ரிசர்வ் வங்கி அசத்தல் அறிவிப்பு!




RTGS முறையில் 24 மணி நேரமும் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளும் புதிய நடைமுறை அமலுக்கு வந்துள்ளதால் வணிகர்கள் உள்ளிட்டோர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

RTGS மூலம் 2 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான தொகையை வணிகர்கள் உள்ளிட்டோர் பணப்பரிமாற்றம் செய்து வந்தனர். இந்தமுறை மூலம் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே பணம் அனுப்ப முடியும். இல்லையென்றால், அடுத்தநாள் காலை 7 மணி வரை காத்திருக்க வேண்டிய சூழல் இருந்தது. மேலும், இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் RTGS மூலம் பணம் அனுப்ப முடியாத நிலையும் இருந்தது. 

இந்நிலையில், அக்டோபர் மாதம் ரிசர்வ் வங்கி வெளியிட்டிருந்த அறிவிப்பில், டிசம்பர் மாதம் முதல் ஆர்டிஜிஎஸ் சேவைகள் 24 மணி நேரமும் கிடைக்கும் என்று அறிவித்திருந்தது. வாடிக்கையாளர்கள் எந்நேரமும் RTGS- ஐ பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இந்த புதிய நடைமுறை கொண்டு வரப்பட்டிருப்பதாகவும் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறியிருந்தார்.

RTGS- மூலம் 2 லட்சம் ரூபாய்க்கும் மேலான தொகையை வங்கி மூலமாகவோ அல்லது நெட் பேங்கிங் (Net Banking) மூலமாகவோ உடனுக்குடன் பரிமாற்றம் செய்யலாம். ஆனால், Neft மூலம் வங்கி வேலை நேரத்தில் மட்டுமே பணம் அனுப்ப முடியும். அதுவும், பணம் அனுப்பினால் சுமார் ஒரு மணி நேரத்துக்குப் பிறகே, பணம் பெறுபவருக்கு சென்றடையும். இதனால், வணிகர்கள் உள்ளிட்டோர் RTGS முறையை பயன்படுத்தினர். மேலும், RTGS - தவறுகள் மற்றும் செட்டில்மெண்ட் ரிஸ்க்கை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

IMPS, NETC NFS ஆகியவை போன்று, முந்தைய நடைமுறையில் 5 நாட்கள் மட்டுமே செயல்பட்டு வந்த RTGS தற்போது அனைத்து நாட்களிலும் செயல்படவுள்ளது. MPC கூட்டத்துக்குப் பிறகு ஆர்.பி.ஐ-யின் புதிய மாற்றங்கள் குறித்து கருத்து தெரிவித்த ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், இந்திய நிதிச் சந்தைகளின் உலகளாவிய ஒருங்கிணைப்புக்கு பயன்படும் வகையில் ஆர்பிஐ-யில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவித்தார். உலகளாவிய நிதி மையங்களை மேம்படுத்தி, அதன்மூலம் இந்திய நிறுவனங்கள் பயன்படும் வகையில் ஆர்.பி.ஐயின் செயல்பாடுகள் இருப்பதாகவும் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார். மேலும், RTGS -ல் கொண்டுவரப்பட்டுள்ள புதிய மாற்றங்கள் நாட்டில் பணப்பரிமாற்றத்தை எளிமைப்படுத்தும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். RTGS முறை 24 மணி நேரமும் செயல்படும் ஒரு சில நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்திருப்பதாகவும் அவர் கூறினார். 2019 ஜூலை முதல் இணையப் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் நோக்கில் RTGS, NEFT - பரிமாற்றத்துக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments