EVM வாக்கு இயந்திரத்தை தடை செய்யக்கோரி அதிரையில் கோரிக்கை முழக்க கண்டன ஆர்ப்பாட்டம் !



மின்னணு வாக்கு இயந்திரத்தில் மோசடியாக திருத்தங்கள் செய்து நாடாளுமன்ற தேர்தல் முதல் பல்வேறு மாநில தேர்தல்களிலும் தொடர் வெற்றியை பாஜக பெற்று வருகிறது என பல்வேறு அரசியல் கட்சிகளின் முக்கிய தலைவர்கள், அரசியல் விமர்சகர்கள் என பலதரப்பினர் குற்றஞ்சாட்டி EVM-ஐ தடை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் மின்னணு வாக்கு இயந்திரத்தை தடை செய்ய கோரியும், வாக்குச்சீட்டு முறையில் தேர்தலை நடத்த கோரியும் அதிராம்பட்டினத்தில் இன்று மாலை அதிரை மின்னணு வாக்கு இயந்திர எதிர்ப்பு குழு சார்பில் கோரிக்கை முழக்க கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 
பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், தமிழக சட்டசபைக்கான தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், அத்தேர்தலை வாக்குச்சீட்டு முறையில் நடத்திட வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

இந்த கோரிக்கை முழக்க கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அதிரை மின்னணு வாக்கு இயந்திர எதிர்ப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் A.J. ஜியாவுதீன் கண்டன உரை நிகழ்த்தினார். அப்போது ஈவிஎம் மிஷினை தடை செய்ய தேர்தல் ஆணையமும், அரசும் மறுக்கும் பட்சத்தில் ஒட்டுமொத்த மக்களும் வாக்களிப்பதை மறுக்கும் நிலைக்கு தள்ளப்படுவார்கள். அவ்வாறான நிலையை தேர்தல் ஆணையம் ஏற்படுத்தி விடக்கூடாது என்றும், சமீபத்தில் நடந்த தேர்தல் முடிவுகள் எல்லாவற்றையும் மீளாய்வு செய்து பார்க்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இந்த கோரிக்கை முழக்க ஆர்பாட்டத்தில் அதிராம்பட்டினம் அனைத்து முஹல்லா கூட்டமைப்பினர், அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள், புரவலர்கள், தொண்டர்கள், விவசாயிகள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments