புதுகை மாவட்டத்தில் 50 மினி கிளினிக் துவங்க முடிவு



   

 
    புதுக்கோட்டை மாவட்டத்தில் 50 இடங்களில் மினி கிளினிக் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 21 இடங்களில் தொடங்க பணிகள் நடந்து வருகிறது. தமிழகம் முழுவதும் 2000 அம்மா மினி கிளினிக்குகள் அமைக்கப்படுகிறது. இதில் முதற்கட்டமாக தமிழகம் முழுவதும் 630 கிளினிக்குகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வருகின்றன. சென்னையில் 47 கிளினிக்குகள் பயன்பாட்டிற்கு வருகின்றன. இந்த மினி கிளினிக்குகள் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். கிராமப்புறங்களில் மட்டும் மாலை 7 மணி வரை திறந்திருக்கும். 
        இந்த மினி கிளினிக்கில் ஒரு டாக்டர், ஒரு செவிலியர் ஒரு மருத்துவ பணியாளர்கள் இருப்பார்கள். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி, புதுக்கோட்டை என இரண்டு சுகாதார மாவட்டங்கள் உள்ளது. இந்த இரண்டு மாவட்டங்களில் 50 மினி கிளினிக்குகள் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 21 இடங்களில் மினி கிளினிக் அமைக்க ஆயத்த பணிகளை மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து சுகாதாரத்துறை ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments