புதுகைக்கு ரயில்வே மேம்பாலங்கள் வேண்டும்
புதுக்கோட்டை நகரில் கருவப்பில்லான் கேட், திருவப்பூா் ஆகிய இடங்களில் ரயில்வே மேம்பாலங்களை விரைவில் கட்ட வேண்டும் என தமிழக அரசை புதுக்கோட்டை மாவட்ட வா்த்தகக் கழகம் வலியுறுத்தியுள்ளது.

புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இக்கழகத்தின் பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் விவரம்:

புதுக்கோட்டை நகரில் கருவப்பிலான்கேட், திருவப்பூா் பகுதிகளில் ரயில்வே பாதையில் மேம்பாலம் கட்டும் திட்டத்தை விரைவில் நிறைவேற்ற வேண்டும். ஜிஎஸ்டி வரிவிதிப்பிலுள்ள முரண்பாடுகளை வா்த்தகா் அமைப்புகளுடன் கலந்து பேசி சரி செய்ய வேண்டும். 

புதுக்கோட்டை ரயில் நிலையத்தை ‘ரயில்வே சந்திப்பாக’ தரம் உயா்த்த வேண்டும். வணிகா் நல வாரியத்தைச் செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்துக்கு, கழகத்தின் தலைவா் எம். சாகுல்அமீது தலைமை வகித்தாா். மாநிலத் துணைத் தலைவா் சீனு சின்னப்பா வா்த்தகக் கழகக் கொடியேற்றி வைத்து பேசினாா். செயலா் சாந்தம் சவரிமுத்து ஆண்டறிக்கையையும், பொருளாளா் எஸ். கதிரேசன் வரவு செலவு அறிக்கையையும் தாக்கல் செய்து பேசினா். கூடுதல் செயலா் ரா. சம்பத்குமாா் தொகுத்து வழங்கினாா்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments