வாட்ஸ்அப் மூலம் கணினியிலும் விடியோ, ஆடியோ அழைப்பு மேற்கொள்ளும் வசதி




புது தில்லி: செல்லிடப்பேசி செயலியான வாட்ஸ்அப்பை, வாட்ஸ்அப் வெப் மூலம்  கணினியில் பயன்படுத்தும் பயனாளர்கள், இனி அதிலேயே விடியோ மற்றும் ஆடியோ அழைப்புகளை மேற்கொள்ளும் வசதிகளும் ஏற்படுத்தப்பட உள்ளது.

செல்லிடப்பேசியில் விரைவாக செய்திகளைப் பரிமாறிக் கொள்ள உதவும் வாட்ஸ்அப் தற்போது வாட்ஸ்அப் டெஸ்க்டாப் செயலியை உருவாக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது.

இந்த புதிய வாட்ஸ்அப் டெஸ்க்டாப் செயலியில், விடியோ மற்றும் ஆடியோ அழைப்புகளை மேற்கொள்வதற்கான பொத்தான்கள் இடம்பெற்றிருக்கும்.

தற்போது இது சோதனை முயற்சியிலேயே இருப்பதாகவும், சில பயனாளர்களுக்கு மட்டும் இதனை அறிமுகப்படுத்தி பயன்படுத்த வாய்ப்பளிக்க திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

எனினும், இந்த டெஸ்க்டாப் செயலியைப் பயன்படுத்தவும், செல்லிடப்பேசி அவசியமாக இருக்கும், ஆனால், ஆடியோ, விடியோ அழைப்புகள் கணினி மூலமே மேற்கொள்ளப்படும்.

அதுமட்டுமல்லாமல், வாட்ஸ்அப் பயனாளர், ஒரு விடியோவை தனது நண்பர்கள், உறவினர்கள் அல்லது ஸ்டேட்டஸில் வைக்கும் முன்பு, அதன் ஆடியோவை மியூட் செய்யும் வாய்ப்பும் உருவாக்கப்பட்டு வருகிறது.

அதுவும் பீட்டா முறையில் சோதனையில் உள்ளது.  அதாவது ஒரு விடியோவை வாட்ஸ்அப்பில் பதிவேற்றம் செய்யும் போது, தற்போது டிரிம்மர் வாய்ப்பு வருவது போல, மியூட் ஆப்ஷனும் இணைய உள்ளது. தற்போது ஒரு விடியோவை எடுத்தால், அதனை பதிவு செய்யும் போது அதனுடன் பதிவான ஆடியோவையும் சேர்த்துத்தான் வாட்ஸ்அப்பில் பதிவேற்ற முடியும். 

இதுமட்டுமல்லாமல் பல புதிய வசதிகளையும் வாட்ஸ்அப் உருவாக்கி வருவதாகக் கூறப்படுகிறது.
 
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments