'மகளிர் சக்தி' விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு.! புதுக்கோட்டை கலெக்டர் உமா மகேஸ்வரி தகவல்.!!



மகளிர் சக்தி (நாரி சக்தி புரஸ்கார்) விருதிற்கு தகுதி வாய்ந்த பெண்கள், குழுக்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பி.உமாமகேஸ்வரி இ.ஆப., அவர்கள் தெரிவித்ததாவது.

மத்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் மூலம் மகளிர் சக்தி விருது (நாரி சக்தி புரஸ்கார்) அறிவிக்கப்பட்டு தகுதி வாய்ந்த பெண்கள், குழுக்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து இணையதள விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8 அன்று மத்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் மூலம் மகளிருக்கான தனித்துவமான சேவை குறிப்பாக பின்தங்கிய மற்றும் பாதிப்படைந்துள்ள பெண்களுக்கான சேவை புரிபவர்களை அங்கீகரிக்கும் விதமாக மகளிர் சக்தி விருது (நாரி சக்தி புரஸ்கார்) எனும் தேசிய விருது வழங்கப்படுகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் மகளிருக்காக தனித்துவமான சேவை புரிந்த குறிப்பாக சுகாதாரம், ஆற்றுப்படுத்தல், சட்ட உதவி, விழிப்புணர்வு, கல்வி, பெண்களுக்கு அதிகாரமளிப்பதில் குறிப்பிட்ட பங்களிப்பு, பெண்கள் மீது நிகழ்த்தப்படும் கொடுமைகள், வன்முறை, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாகுபாடு, துன்புறுத்துதல், பெண் குழந்தை பாலின விகிதத்தில் முன்னேற்றம் போன்றவற்றில் தலைசிறந்த பங்களிப்பு அளித்த பெண்கள், குழுக்கள் மற்றும் நிறுவனங்களை அங்கீகரிக்கும் விதமாக தனிப்பட்ட நபர்களுக்கான விருதிற்கு சான்றிதழ் மற்றும் 1 இலட்சம் ரூபாய்க்கான காசோலையும், நிறுவனங்களுக்கான விருதிற்கு சான்றிதழ் மற்றும் 2 இலட்சம் ரூபாய் காசோலையும் வழங்கப்படும். 

நடப்பு ஆண்டிற்கான விருது வழங்கிட தகுதியான விண்ணப்பங்களை 07.01.2021-க்குள் இணையவழியில் விண்ணப்பிக்கலாம். இணையதளம் மூலம் பெறப்படும் விண்ணப்பங்களில் அனைத்து தகுதிகள் பெற்ற விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டு விருது புதுடெல்லியில் மாண்புமிகு குடியரசு தலைவரால் வழங்கப்படும். இவ்விருதிற்க்கான விரிவான வழிகாட்டி நெறிமுறைகள் மத்திய அரசின் மகளிர் மற்றும் சிறார் மேம்பாட்டு அமைச்சகத்தின் www.narisaktipuraskar.wcd.gov.in என்னும் இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பி.உமாமகேஸ்வரி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments