கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் திட்டக்குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி.!கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், திட்டக்குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதனை ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் சுவாமிநாதன், நலதேவன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

73-வது அரசியலமைப்பு திருத்த சட்டம் தமிழ்நாடு ஊராட்சி சட்டம், மூன்றடுக்கு ஊராட்சி நிலை குழுக் கள், கிராம ஊராட்சியின் வருவாய் இனங்கள், கடமைகள் வளர்ச்சித் திட்டங்களைத் தயாரித்தல் ஆகிய முக்கிய அம்சங்கள் குறித்து கந்தர்வகோட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட 36 ஊராட்சிகளை சேர்ந்த திட்டக் குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. 

பயிற்றுனர்கள் சைவராசு, மகேந்திரன் ஆகி யோர் பயிற்சி அளித்தனர். அதனைத்தொடர்ந்து திட்டக் குழு உறுப்பினர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments