கந்தர்வகோட்டையில் பழுதடைந்த மின் கம்பத்தை மாற்றி தராமல் கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்காமல் தூங்கி வரும் மின்சார வாரியத்தை எழுப்புவதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சங்கு ஊதி ஆர்ப்பாட்டம்.!!கந்தர்வகோட்டையில் பழுதடைந்த மின் கம்பத்தை மாற்றி தராமல் கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்காமல் தூங்கி வரும் மின்சார வாரியத்தை எழுப்புவதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சங்கு ஊதி ஆர்ப்பாட்டம் செய்யப்பட்டது.

கந்தர்வகோட்டை ஒன்றியம் வெள்ளாள விடுதி கிராமத்தில் பழுதடைந்த மின்கம்பங்களை மாற்றித்தரக்கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இரண்டு முறை போராட்டம் அறிவித்து, சமாதான கூட்டத்தில் நடவடிக்கை எடுக்க உறுதி கூறிய மின்சார வாரிய அலுவலர்கள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி தூங்கும் மின்சார வாரியத்தை எழுப்பும் விதமாக சங்கு ஊதி எழுப்பும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

ஆர்ப்பாட்டத்திற்கு என்.வீராச்சாமி தலைமை வகித்தார், எஸ்.காளிமுத்து முன்னிலை வகித்தார், எஸ்.ராஜேந்திரன் ஆர்பாட்டத்தை துவக்கி வைத்தார். மாவட்டச் செயலாளர் மு. மாதவன் இரண்டு முறை அகவாசம் கூறியும் பழுதடைந்த மின்கம்பங்களை மாற்றி தர மறுக்கும் மின்சார வாரிய அதிகாரிகளை கண்டித்து பேசினார். 

சங்கு ஊதி ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய செயலாளர் உ. அரசப்பன் , ஜி. நகராஜ் , சங்கர், கே. அம்பிக பதி , டி. அம்பல் ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments