வேளாண் திருத்த சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்டம் ரெகுநாதபுரத்தில் மமக ஆர்ப்பாட்டம்


மனிதநேய மக்கள் கட்சி புதுக்கோட்டை மேற்கு மாவட்டம் ரெகுநாதபுரத்தில் விவசாயிகளுக்கு எதிரான மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் டிசம்பர் 25 வெள்ளிக்கிழமை நடைப்பெற்றது.
 
ஆர்ப்பாட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் உதுமான் அலி, மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் பிஸ்மி கனி ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.ஆர்ப்பாட்டத்தின்போது வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரியும், மத்திய அரசிற்கு எதிராகவும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. 

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட ,நகர ,ஓன்றிய ,கிளை நிர்வாகிகள் பங்கேற்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments