வாரம்தோறும் திங்கட்கிழமை மாற்றுத்திறனாளிகள் மருத்துவ சான்றிதழ் பெறலாம்
கலெக்டர் உமாமகேஸ்வரி ஒரு செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: புதுக்கோட்டை மாவ ட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் சிறப்பு மருத்துவர்களை கொண்டு மருத்துவ சான்று வழங்கும் முகாம் வாரந்தோறும் திங்கட்கிழமை நடைபெற்று வந்தது. கொரோனா நோய் தொற்று பரவாமல், தடுப்பதற்காக மருத்துவ சான்று வழங்கும் முகாம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி மருத்துவ சான்றிதழ் மாவ ட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திலேயே பெறுவதற்கு புகைப்படம் 5, ஆதார் அட்டை நகல் 2, ரேஷன் கார்டு நகல் 2 மற்றும் வாக்காளர் அட்டை நகல் 1 (18 வயது நிரம்பியவர் மட்டும்) போன்ற ஆவணங்களுடன் வரும் 28ம் தேதி முதல் வாரந்தோறும் திங்கட்கிழமை தோறும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நடைபெறும் சிறப்பு மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments