கறம்பக்குடியில் மஜகதீவிரஉறுப்பினர்சேர்க்கைமுகாம்!
கடந்த அக்.17 அன்று தொடங்கிய மஜகவின் 75 நாட்கள் தீவிர உறுப்பினர் சேர்க்கை நிகழ்வுகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.

எதிர்வரும் டிச.31 தேதியை இலக்காக கொண்டு தமிழகமெங்கும் நூற்றுக்கணக்கான முகாம்கள் நடத்தப்பட்டு ஆயிரக்கணக்கானோர் கட்சியில் புதிய உறுப்பினராக இணைந்துள்ளனர்.

அவர்கள் அனைவருக்கும் மஜக சார்பில் உறுப்பினர் அட்டைகள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

டிசம்பர் 24 வியாழக்கிழமை புதுக்கோட்டை மேற்கு மாவட்டம் கறம்பக்குடியில் நடைப்பெற்ற உறுப்பினர் சேர்க்கை முகாம் நகர செயலாளர் ஆசை அப்துல்லா தலைமையில் நடைபெற்றது.

மஜக துணைப் பொதுச்செயலாளர் மன்னை செல்லச்சாமி மற்றும் மாநில துணைச் செயலாளர் துரைமுஹம்மது ஆகியோர் பங்கேற்று முகாமை துவக்கி வைத்து முதற்கட்ட அடையாள அட்டையை வழங்கினர்.

இளைஞர்கள் உள்ளிட்ட பலர் தங்களை ஆர்வமுடன் மஜகவின் உறுப்பினராக பதிவு செய்து கொண்டனர்.

இதில், மாவட்ட செயலாளர் முஹம்மது ஜான், பொருளாளர் ரஹீம்தாலிஃப், துணைச்செயலாளர் லெட்சுமணன், விவசாய அணி செயலாளர் சலீம்,  நகர நிர்வாகிகள் ரபியுதீன், சிராஜூதீன், நகர அணி செயலாளர்கள் முஹம்மது மன்சூர், சையது இப்ராகிம் உள்ளிட்ட நிர்வாகிகளும், உறுப்பினர்களும் திரளாக பங்கேற்றனர்.

தகவல்;

#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#புதுக்கோட்டைமேற்குமாவட்டம்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments