வெளிநாடு செல்வதற்காக காரில் விமான நிலையம் வந்த வாலிபர் விபத்தில் பலி 

  
   

வெளிநாடு செல்வதற்காக திருச்சி விமான நிலையத்திற்கு காரில் சென்ற வாலிபர் லாரி மோதி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.இதில் மேலும் 4 பேர் காயமடைந்தனர்.புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள ஊரணிபுரத்தை சேர்ந்தவர் அப்துல் ரகுமான். இவரது மகன் பெஹரான்கான்(32). நேற்று இரவு வெளிநாடு செல்வதற்காக திருச்சி விமான நிலையத்திற்காக பெஹரான்கான் தனது நண்பர்கள் 4 பேருடன் காரில் சென்றுள்ளார்.
அவர்கள் புதுக்கோட்டை ரெங்கம்மாள் சமுத்திரம் அருகே சென்றனர். அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரே வந்த லாரி மீது மோதியது. இந்த விபத்தில் வெளிநாடு செல்ல இருந்த பெஹரான்கான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.மேலும் காரில் பயணித்த 4 பேரும் படுகாயத்துடன் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து வெள்ளனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புதுக்கோட்டை அருகே வெளிநாடு செல்வதற்காக விமான நிலையம் சென்ற இளைஞர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments