அம்மாப்பட்டினத்தில் நடைபெற்ற SDPI கட்சியின் புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட செயற்குழு கூட்டம்.!                  

 
SDPI கட்சி புதுக்கோட்டை கிழக்கு மாவட்டத்தின் செயற்குழு இன்று (24-12-2020) அம்மாபட்டிணத்தில் நடைபெற்றது. புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட துணை தலைவர்  சகோதரர்.அரபாத் அவர்களின் தலைமையில், மாவட்ட தலைவர் சகோதரர்.செய்யது முகம்மது வரவேற்புரையாற்ற கூட்டம் துவங்கியது.
இதில் SDPI கட்சியின் மாநில செயலாளரும் திருச்சி மண்டல தலைவருமான 
சகோதரர்.அபூபக்கர் சித்தீக் அவர்கள் சிறப்புரையாற்றினார். 

மேலும் இந்த கூட்டத்தில் புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட நிர்வாகத்தில் புதிய பொறுப்பாளர்கள் நியமனம் செய்தல்,SDPI கட்சின் சார்பாக மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் டிசம்பர் 25 முதல் ஜனவரி 5 ஆம் தேதி வரை நடத்த இருக்கும் போராட்டத்தின் அங்கமாக புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் சார்பாக நடத்த இருக்கும் போராட்டங்கள் பற்றி திட்டமிடல் போன்ற முக்கியமான செயல்பாடுகள் பற்றி விவாதிக்கப்பட்டது.

அதன் படி, SDPI கட்சியின் புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட தலைவராக சகோதரர் U.செய்யது முகம்மது அவர்களும் SDPI கட்சியின் புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட பொதுச்செயலாளராக சகோதரர் M.முகம்மது ஹனிபா அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மேலும் ஏற்கனவே நடைபெற்ற மாவட்ட கலந்தாய்வில் SDPI கட்சியின் மீமிசல் நகர துணைதலைவராக சகோதரர்.S.முகம்மது யாசீன் அவர்களும் SDPI கட்சியின் மீமிசல் நகர செயலாளராக சகோதரர். K.அன்வர் இப்ராஹீம் அவர்களும் நியமிக்கப்பட்டனர்.

இறுதியாக சகோதரர்.ஹனிபா அவர்கள் நன்றியுரையாற்றினார்.இதில் SDPI கட்சியின் புதுகை கிழக்கு மாவட்ட, தொகுதி, நகர, கிளை நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments