மத்திய அரசின் புதிய 3 வேளான் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் போராடக்கூடிய விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து மனிதநேய ஜனநாயக கட்சி புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் ஆவுடையார் கோவில் ஒன்றியம் சார்பில் பெட்டி படுக்கையுடன் நூதன போராட்டம் நடத்தினர்.
மாவட்ட துணை செயலாளர் செய்யது அபுதாஹிர் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் விவசாய அணி மாநில செயலாளர் பேரை அப்துல் சலாம், மாவட்ட செயலாளர் முனைவர் முபாரக் அலி, மாவட்ட பொருளாளர் சேக் இஸ்மாயில் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
முன்னதாக ஒன்றிய செயலாளர் அப்துல்லா அனைவரையும் வரவேற்றார். இறுதியில் ஒன்றிய பொருளாளர் அஜ்மீர் கான் நன்றி கூறினார்.
இப்போராட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் அஜ்மீர் அலி, மாவட்ட துணை செயலாளர் சாஜிதீன், இளைஞர் அணி மாவட்ட துணை செயலாளர் முகம்மது அல்காப், மீனவர் அணி மாவட்ட துணை செயலாளர் அப்பாஸ், விவசாய அணி மாவட்ட துணை செயலாளர் அப்துல் ரஹிம், வர்த்தக அணி மாவட்ட துணை செயலாளர் சீனிவாசன், தொழிற்சங்க மாவட்ட தலைவர் முகம்மது குஞ்சாலி, தொழிற்சங்க மாவட்ட துணை செயலாளர் செய்யது அபுதாஹிர், மீனவர் அணி மாவட்ட துணை செயலாளர் சம்சுதீன், கொள்கை பரப்பு மாவட்ட துணை செயலாளர் நூர் முகம்மது, மனித உரிமை மாவட்ட துணை செயலாளர் சுந்தர் ராஜன், சுற்றுச்சூழல் மாவட்ட துணை செயலாளர் மணிகண்டன், வர்த்தக அணி மாவட்ட பொருளாளர் முகம்மது அன்சாரி, வர்த்தக அணி ஒன்றிய செயலாளர் இமாமுதீன், தொழிற்சங்க ஒன்றிய செயலாளர் யாகூப் உசேன், இளைஞர் அணி ஒன்றிய செயலாளர் முகம்மது சாலிகு, தொழிற்சங்க ஒன்றிய தலைவர் சதாம் உசேன். மருத்துவ சேவை அணி ஒன்றிய செயலாளர் படிக்காசு ஆகியோர் கையில் பெட்டி படுக்கைகளுடன் கண்டன முழக்கமிட்டு நடந்து செல்ல முற்பட்டபோது போலிஸார் தடுத்து நிறுத்தினார்கள்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments