அரசர்குளம் தென்பாதியில் அம்மா மினி கிளினிக் திறக்க தமுமுக கோரிக்கை.

அரசர்குளம் தென்பாதியில்  அம்மா மினி கிளினிக் திறக்க தமுமுக கோரிக்கை.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஒன்றியம் அரசர்குளம் தென்பாதி ஊராட்சியில் , இயங்கி வந்த துணை ஆரம்ப சுகாதார நிலையம் சில ஆண்டுகளாக மருத்துவர்கள் செவிலியர்கள் பற்றாக்குறையால் செயல் படாமல் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறது. இதனால் அரசர்குளம் தென்பாதி ஊராட்சிக்கு உட்பட்ட பல கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அடிப்படை மருத்துவ வசதிகளயின்றி தவித்து வருகின்றனர்.போதிய கட்டமைப்பு வசதி உள்ள அந்த துணை சுகாதார நிலையத்தை ,புதுப்பித்து முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ள அம்மா மினிகிளிக்கை உடனடியாக தொடங்குமாறு , தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பாக கோரிக்கைமனுவை அறந்தாங்கி மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனரிடம் அளிக்கப்பட்டது.

மனுவை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் ஜகுபர் அலி அவர்கள் அறந்தாங்கி  சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் திரு.விஜயகுமார் அவர்களிடம் வழங்கினார்கள் , உடன் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் கிரீன் முஹ்மது, மற்றும் அரசர்குளம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக ம், மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் உறுப்பினர்கள், பொதுமக்கள் உடனிருந்தார்கள்.

மனுவை பெற்றுக்கொண்ட துணை இயக்குனர் அவர்கள் உடனடியாக ஆய்வு செய்து , ஜனவரி 2021 குல்உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments