9 மாத குழந்தையின் தொண்டையில் சிக்கிய தைல பாட்டில் மூடி: காப்பாற்றிய மதுரை அரசு மருத்துவமனை மருத்துவர்கள்




மதுரையில் 9 மாத குழந்தை ஒன்று தலைவலி பாட்டில் மூடியை விழுங்கியது. தொண்டைக் குழியில் சிக்கிய அந்த மூடியை அறுவை சிகிச்சை செய்யாமலேயே பாதுகாப்பாக வெளியே எடுத்து குழந்தையின் உயிரை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்துவர்கள் காப்பாற்றினர்.

மதுரை அருகே கருமாத்தூர் செல்லம்பட்டி குண்டுவேலம்பட்டியைச் சேர்ந்தவர் இளமுருகன். இவரது ஒன்பது மாத ஆண் குழந்தை ஆதித்யன். இந்தக் குழந்தை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது தரையில் கிடந்த தலைவலி தைல பாட்டில் மூடியை எடுத்து விழுங்கியுள்ளது.



அந்த மூடி, குழந்தையின் தொண்டைக்குழியில் சிக்கிக் கொண்டது. குழந்தை வலியால் துடித்தது. சரியாக சாப்பிட முடியாமல், தண்ணீர் குடிக்க முடியாமல் சிரமப்பட்டுள்ளது. பதற்றமடைந்த பெற்றோர், குழந்தையை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்த்தனர்.

காதுமூக்கு தொண்டைப்பிரிவு தலைவர் பேராசிரியர் டாக்டர் தினகரன், உதவிப் பேராசிரியர் டாக்டர் நாகராஜகுருமூர்த்தி தலைமையிலான மருத்துவக்குழுவினர் பாதுகாப்பான முறையில் சிகிச்சை அளித்து குழந்தையின் தொண்டைக் குழியில் சிக்கியிருந்த மூடியை பாதுகாப்பாக சிகிச்சை அளித்து வெளியே எடுத்து குழந்தையின் உயிரைக் காப்பாற்றினர்.

தற்போது குழந்தை நலமுடன் உள்ளது. குழந்தையின் உயிரை காப்பாற்றிய மருத்துவக்குழுவினரை டீன் சங்குமணி பாராட்டினார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments