4 லட்சத்து 63 ஆயிரத்து கார்டுதாரர்களுக்கு ரூ.2,500 ஜனவரி 4-ந்தேதி முதல் வினியோகம்




புதுக்கோட்டை மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரூ.2 ஆயிரத்து 500 தொடர்புடைய நியாய விலைக் கடைகள் மூலமாக ஜனவரி 4-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை வாங்கப்பட உள்ளது. விடுபட்ட ரேஷன்கார்டுதாரர்களுக்கு 13-ந்தேதி வழங்கப்படும். மாவட்டத்தில் புழக்கத்தில் உள்ள 4 லட்சத்து 63 ஆயிரத்து 988 அரிசி பெறும் மின்னணு குடும்ப அட்டைதாரர்களுக்கு (இலங்கை அகதிகள் முகாமில் வசிக்கும் குடும்பங்கள் உட்பட) வழங்கப்பட உள்ளது.


இந்த பரிசு தொகுப்பு வினியோகத்தை முறைப்படுத்தும் வகையில் தெரு வாரியாக உள்ள குடும்ப அட்டைகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் சுழற்சி முறையில் நாள் ஒன்றுக்கு 200 குடும்ப அட்டைகளுக்கு மிகாமல் வழங்குவதற்கு ஏதுவாக காலையில் 100 குடும்ப அட்டைகளுக்கும், மதியத்துக்கு பிறகு 100 குடும்ப அட்டைகளுக்கும் வழங்கும் நாள் நேரம் போன்ற விவரங்களை குறிப்பிட்டு டோக்கன்கள் வருகிற 26-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை ரேஷன்கடை பணியாளர்கள் மூலம் வழங்கப்படும். மேலும், மின்னணு குடும்ப அட்டையில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்கள் யார் சென்றாலும் பொங்கல் பரிசுத் தொகுப்பு நியாய விலைக் கடையில் வழங்கப்படும். ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு நபர் மட்டுமே பொருள் பெற்றுச் செல்ல வர வேண்டும்.

மின்னணு குடும்ப அட்டைகள் தொலைந்து போன வர்களுக்கு அக்குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர் எவரேனும் ஒருவரின் ஆதார் அட்டையினை வைத்தோ, அல்லது பதிவு செய்யப்பட்ட செல் போனில் பெறப்படும் கடவுச் சொல்லைக் கொண்டோ பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கத் தொகை ரூ.2 ஆயிரத்து 500 பெற்றுக் கொள்ளலாம்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு தொடர்பான புகார்கள் இருந்தால் புதுக்கோட்டை தனி தாசில்தார் 94450 00312, ஆலங்குடி தனி தாசில்தார் 94450 00313, குளத்தூர் வட்ட வழங்கல் அலுவலர் 94450 00314, கந்தர்வகோட்டை வட்ட வழங்கல் அலுவலர் 94450 00315, திருமயம் வட்ட வழங்கல் அலுவலர் 94450 00316, அறந்தாங்கி தனி தாசில்தார் 94450 00317, ஆவுடையார்கோவில் வட்ட வழங்கல் அலுவலர் 94450 00318,மணமேல்குடி வட்ட வழங்கல் அலுவலர் 94438 70034, 9445000320, பொன்னமராவதி வட்ட வழங்கல் அலுவலர் 94450 00404, கறம்பக்குடி வட்ட வழங்கல் அலுவலர் 94450 00405, இலுப்பூர் வட்ட வழங்கல் அலுவலர் 94450 00319, விராலிமலை வட்ட வழங்கல் அலுவலர் 90804 87553 என்ற செல் எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments