அறந்தாங்கி பகுதியில் முக்கிய சாலைகளில் திட்டப்பணி நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஆய்வு




திருச்சி நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் அறந்தாங்கி, ஆவுடையார்கோவில் மற்றும் ஆலங்குடி பகுதியில் உள்ள மாநிலச் சாலைகள், மாவட்ட முக்கிய சாலைகள் மற்றும் இதர மாவட்ட சாலைகளில் நடைபெறும் திட்டப்பணிகளை ஆய்வு செய்தார். திருச்சி நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் பழனி அறந்தாங்கி, ஆவுடையார்கோவில் மற்றும் ஆலங்குடி பகுதியில் உள்ள மாநிலச் சாலைகள், மாவட்ட முக்கிய சாலைகள் மற்றும் இதர மாவட்ட சாலைகளில் நடைபெறும் 2019-20, 2020-21 திட்டப்பணிகளை ஆய்வு செய்தார். புணிகள் நிறைவுற்ற சாலைகளின் தரத்தை ஆய்வு செய்த அவர், சாலை பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளுமாறு, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து குறுகலான வளைவுகளில் பாதுகாப்பு கற்கள், எச்சரிக்கை பலகை நடவும், முடிவுறாத பணிகளை விரைந்து முடித்திடவும் அறிவுறுத்தினார்.

பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்தபோது, விடுபட்ட கி.மீ கற்கள், பர்லாங் கற்களை நடவும், மீதமுள்ள அனைத்து கற்கள், பாலங்கள், மற்றும் மரங்களில் வர்ணம் தீட்டி புதுப்பிக்கவும் அறிவுறுத்தினார். உயரமான புருவங்களை அகற்றி, சாலைகளில் மழைநீர் தேங்காதவாறு பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், உயரமான மற்றும் குறுகலான வேகத்தடைகளை அகற்ற முறையான அளவுகளை பின்பற்றி வேகத்தடைகளை மிளிரும் கோடுகள், ஒளிப்பான்கள், எச்சரிக்கை பலகைகளுடன் அமைத்திடவும் அவர் நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்களுக்கு அறிவுறுத்தினார். ஆய்வின்போது உதவி கோட்டப்பொறியாளர்கள் சத்தியமூர்த்தி, செய்யதுஇப்ராகிம், உதவிப் பொறியாளர்கள் முத்துக்குமார், அருண்ராஜ், லெட்சுமிப்பிரியா ஆகியோர் உடன் இருந்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments